ப்பா,இப்படி ஒரு காதலா ? தனலட்சுமி தன் கையில் போட்டுக்கொண்ட டாட்டூ. வைரலாகும் வீடியோ.

By Siva · 12/1/2023

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Dhanalakshmi (@dhanalakshmi_ofcl)

கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் ரச்சித்தா வெளியேறி இருந்தார். அதே போல இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வென்ற அமுதவானனை தவிர மற்ற 6 பேரும் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பல போட்டியாளர்கள் உள்ளே சென்ற வண்ணம் இருகின்றனர்.

தனலட்சுமியின் காதல் :

அந்த வகையில் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.  70 நாள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த தனலட்சுமி எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் லோகோவை தனது கையில் அவர் டாட்டூ வரைந்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் அந்த அளவு காதலிப்பதாக குறிப்பிடும் வகையில் அவர் இந்த டாட்டுவை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தனலட்சுமியின் வெளியேற்றம் :

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாமினேஷனின் அமுதவாணன் மற்றும் Adkவை தவிர அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, தனலட்சுமி, ரச்சித்தா, கதிரவன் ஆகிய 7 பேர் நாமிநெட் ஆகி இருந்தனர். இதில் கதிர், ரச்சிதா அல்லது மைனா நந்தினி தான் வெளியேறுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் தனலட்சுமி வெளியேறி இருந்தார்.

கண்டன்ட் கொடுத்த தனலட்சுமி :

இந்த சீசனில் ஒரு சாதாரண பெண்ணாக அறிமுகமான தனலட்சுமி டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார். இருப்பினும் இந்த சீசனில் கண்டன்ட் கொடுக்கும் நபராக இருந்து வந்தார்.

தனலட்சுமி என்னதான் வெறுப்பை சம்பதித்தாலும் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பிக் பாஸ் வீட்டில் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கதிர், ரச்சிதா, எப்போதும் புறம் பேசிக்கொண்டு இருக்கும் Adk, காமெடி என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் Cringe பெயரை எடுத்த மைனா போன்றவர்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனலட்சுமி வெளியேறியது தான் ஆச்சரியமே.

Tamil Behind Talkies AMP · Quick view
View full