என்னது சிகரெட் டப்பா எப்படி இருக்கும்னு கூட தெரியாதா ? அப்போ இது என்ன ? - தனலட்சுமியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

By subhashini · 2/11/2022

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து தன் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

பின் முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருக்கிறார்.இந்த சீசனில் பல டிக் டாக் பிரபலங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தனலட்சுமியும் ஒருவர். இவர் ஈரோடை சேர்ந்தவர். இவர் டிக்டாக் வீடியோக்கள் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை பெற்றவர். தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை அதிகமாக வெளியிட்டு வருகிறார்.

சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில குறும்படங்களிலும் பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல ஹேட்டர்ஸ்களை உருவாக்கிக்கொண்டார். அதற்கு முக்கிய காரணமே இவர் ஆரம்பம் முதலே ஜிபி முத்துவை பகைத்து வந்தது தான். சிலர் தனலட்சுமியை இந்த சீசன் ஜூலியா? வனிதாவா? அர்ச்சனாவா? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.

மேலும், தனலட்சுமி நாமிநேசனின் வந்தால் நிச்சயம் அவரை வெளியேற்றுவோம் என்று ஜி பி முத்து ஆர்மி சமூக வலைதளத்தில் சபதம் போட்டு வருகிறது. இதனால் இவரை தாக்கி பல பதிவுகளை போட்டு வருகின்றனர். மேலும், இவர் டிக் டாக்கில் போட்ட பல வீடியோக்களை பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இவர் முட்டைகளை போட்டு உடைத்து நாசம் செய்த வீடியோவை பகிர்ந்து 'இவர் தான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவரா' என்று கேலி செய்தனர்.

இப்படி ஒரு நிலையில் இவர் மீண்டும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் ரூம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த அறைக்குள் அடிக்கடி ஒரு சில போட்டியாளர்கள் சென்று வருவதை நாம் பல முறை பார்த்து இருக்கிறோம். அவ்வளவு ஏன் சில பெண் போட்டியாளர்கள் கூட இந்த அறையில் சிகிரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=OmQosciNH04

ஆனால், தனலட்சுமிக்கு சிகரெட் பெட்டி கூட எப்படி இருக்கும் என்று தெரியாதாம். சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி இருவரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது தனலட்சுமி எனக்கு சிகரெட் பெட்டி கூட எப்படி இருக்கும்னு தெரியாது என்று சொல்ல அதை கேட்டு வியந்த ஜனனி 'ஏய் அமுது கூட எடுத்துட்டு போனாரே பாக்கலையா' என்று கேட்டார். அதற்கு தனலட்சுமி 'சத்தியமா பாக்கல என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் தனுஷ் பாடல் ஒன்றிற்கு சிகிரெட் பிடித்தவாறு டிக் டாக் செய்த வீடியோவுடன் ஒப்பிட்டு பலர் இவரை கலாய்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full