விஜய் டிவி பிரபலத்துடன் நடித்துள்ள தனலட்சுமி - ஒரு வேல அவங்க அம்மா சொன்ன மாதிரி இவர் தான் ரெகமண்ட் பண்ணி இருப்பாரோ ?

By Ajju · 15/11/2022

நாஞ்சில் விஜயனின் வெப் சீரிஸில் தனலட்சுமி நடித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். அந்த பிரபலத்தின் மூலம் தான் இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=UYm1joc26Yw

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, விஜே மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா,மகேஷ்வரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 6:

இது ஒரு பக்கம் இருக்க, நிகழ்ச்சியில் இதுவரை நடந்த ஏகப்பட்ட சர்ச்சைகளில் தனலட்சுமி தான் சிக்கி இருந்தார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இருந்தாலும், தனலட்சுமி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கமலும், மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். வழக்கம்போல் தனலட்சுமி ஒவ்வொரு டாஸ்கிலும் எல்லா போட்டியாளர்களிடையுமே சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=GmUC-1Oz1jo

தனலட்சுமி குறித்த தகவல்:

அந்த வகையில் பேக்டரி டாஸ்க்கில் கூட மணிகண்டனுக்கும் தனலட்சுமிக்கும் பயங்கர சண்டை நடந்திருக்கிறது. அதோடு அந்த டாஸ்கில் கிடைத்த பணத்தை தனலட்சுமி பதுக்கி இருந்தார். இது தவறு, விதிமீறல் என்று கமல் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் தனம் பயங்கரமாக கதறி கதறி அழுது நான் வெளியே போகிறேன் என்று எல்லாம் சொல்லி இருந்தார். இதற்கிடையிடல் தனலட்சுமி குறித்து அவருடைய நண்பர்கள் பேட்டி அளித்து இருந்தார்கள்.

தனலட்சுமி நண்பர்கள் அளித்த பேட்டி:

அதில் அவர்கள் கூறியிருப்பது, தனலட்சுமி இரண்டு படம் நடித்திருக்கிறார். ரெண்டு படமும் வெளியாகவில்லை. ஒரு படத்தின் புரமோசனுக்காக தான் அவள் அவார்டு ஈவண்ட்டை நடத்தி இருந்தார். காசு இல்லாமையா அவள் அந்த நிகழ்ச்சியை நடத்தி இருந்தாள். நிகழ்ச்சியில் அவள், நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடன் வாங்கி துணி வாங்கினேன் என்று சொல்வதெல்லாம் பொய். அவர் மெக்கானிக்கல் ஷாப் நடத்தி இருக்கிறார். அவருடன் சேர்ந்து எல்லாம் அவள் வீடியோ போட்டு இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)

தனலட்சுமி நடித்த வெப்சீரிஸ்:

அம்மா துணிக்கடை மற்றும் பைனான்ஸ் செய்கிறார். சொல்லப்போனால், அவள் நடித்த இரண்டு படத்தையும் எடுத்ததே அவர்கள் தான். அந்த அளவிற்கு பணம் இருக்கிறது. MlM விளம்பரம் மூலம் பல பேரை ஏமாற்றி சம்பாதித்து இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து ரசிகர்களும் தனலட்சுமி குறித்து சோசியல் மீடியாவில் தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் நாஞ்சில் விஜயனின் வெப் சீரிஸில் தனலட்சுமி நடித்திருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவி காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இவர் வத்திக்குச்சி என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதில் தனலட்சுமி நடித்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய தனலட்சுமி அம்மா விஜய் டிவியில் ஒருவர் மூலமாக தான் தனலக்ஷ்மிக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததாக கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது நாஞ்சில் விஜயன் தானோ.

Tamil Behind Talkies AMP · Quick view
View full