ச்சீ, இவன் பேசறதுக்கு எல்லாம் நான் வருத்தப்படமாட்டேன் - மூத்த போட்டியாளரை அவன், இவன் என்று பேசிய தனலட்சுமி.

By Rajkumar · 2/11/2022

சகப் போட்டியாளரை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் தனலட்சுமி பேசியிருக்கும் வீடியோவை ரசிகர்கள் சுட்டிக்காட்டி சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து தன் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருக்கிறார்.

தனலட்சுமி குறித்த தகவல்:

தற்போது நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. மேலும், இதுவரை நடந்த ஏகப்பட்ட சர்ச்சைகளில் தனலட்சுமி தான் சிக்கி இருந்தார். இவர் டிக் டாக் பிரபலம். சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில குறும்படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இருந்தாலும், தனலட்சுமி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கமலும் மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள்.

https://twitter.com/drkuttysiva/status/1587606880096260096

நிகழ்ச்சியில் தனம்:

கடந்த மூன்றாவது வார நிகழ்ச்சியில் தனலட்சுமி மீது எந்த தவறும் இல்லை என்று கமல் பாராட்டி இருந்தார்.
இதனை அடுத்து வழக்கம்போல் நான்காவது வாரம் தொடங்கி பிக் பாஸில் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின் ராபர்ட் மாஸ்டர் மற்றும் தனலட்சுமி இடையே பிரச்சனை எழுந்திருக்கிறது. அதாவது, தனலட்சுமி பெட்டில் படுத்து தூங்க நினைத்திருக்கிறார். அப்போது ராபர்ட் மாஸ்டர் வேண்டாம் தனம், தூங்கினால் நாய் குறைக்கும் என சொன்னார். உடனே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

மரியாதை இல்லாமல் பேசிய தனம் :

பிறகு தனலட்சுமி, எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும், மரியாதையாக தான் என்னிடம் பேச வேண்டும் என்று விவாதம் செய்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் தனலட்சுமியே பிற போட்டியாளரை மரியாதை இல்லாமல் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நிவாஸ்னியிடம் தனலட்சுமி பேசி கொண்டு இருக்கிறார்.

https://twitter.com/Ilavarisirk/status/1587560299229368320

அவன் இவன் என்று பேசிய தனலட்சுமி :

அப்போது தனம், அவன் இவன் என்று அசிமை மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார். இதை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு, மரியாதை எதிர்பார்க்கும் நீங்கள் இப்படி பிறரை மரியாதையில்லாமல் பேசுவதா? என்று விமர்சித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் கமலஹாசன் இதுகுறித்து இந்த வார இறுதியில் கண்டிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full