சினிமாவில் சிவாஜி, விஜயகாந்துக்கு அடுத்து நான் தான் - பிக் பாஸ் திவாகரின் துணிச்சல் பேச்சு

By subhashini · 9/2/2026

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றிருப்பவர் வாட்டர் மிலான் ஸ்டார் திவாகர். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் இவர் ரீல்ஸ் செய்து போடும் வீடியோக்கள் எல்லாம் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதிலும் அவருடைய பேச்சு, கருத்து எல்லாம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

இதனால் இவர் சோசியல் மீடியாவில் குறுகிய காலத்திலேயே பிரபலமானார் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இவர் தன்னைத்தானே நடிப்பு அரக்கன் என்று சொல்லிக் கொண்டு பேசுவதெல்லாம் மீம்ஸுகளாக இருந்தாலும் சிலருக்கு எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. குறிப்பாக திவ்யாவை காதலிக்கிறேன் என்று இவர் செய்த டார்ச்சல் எல்லாம் ரசிகர்கள் மத்தியிலேயே கடுப்பை ஏற்படுத்தி இருந்தது.

திவாகர் குறித்த தகவல்:

இதனால் இவர் சீக்கிரமாக வெளியேறிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரைப் பற்றிய கேலி, கிண்டல், அவமானங்கள் எல்லாமே இவருக்கு ஒரு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம்.
இதையெல்லாம் தாண்டி தற்போது இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இதைப்பற்றி அளித்த பேட்டியில் திவாகர், பல அவமானங்கள், கேலி, கிண்டல்கள் தாண்டி தான் எனக்கு இந்த ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

https://www.youtube.com/watch?v=2qdA7Hi-cfU

திவாகர் பேட்டி:

எப்போதும் பார்க்காத ஒரு கோணத்தில் ஒரு நடிப்பு அரக்கனை ஒரு வெள்ளி திரையில் நீங்கள் சீக்கிரம் பார்ப்பீர்கள். நடிப்பு என்றால் சிவாஜி. அவருக்கு அடுத்து கமலஹாசன். அதற்கு அடுத்து நான் தான். ஹீரோ ஆகுவதற்கு அனைத்து திறமைகளும் என்னிடம் இருக்கிறது. ஆனால், என்னை பார்த்து பயந்து சூழ்ச்சிகள் செய்கிறார்கள். விஜய், சிவகார்த்திகேயனுக்கு இணையாக எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மதுரையிலிருந்து கேப்டன் விஜயகாந்த் அடுத்து எந்த ஒரு நடிகரும் பெரிதாக தமிழ் திரை உலகிற்கு வரவில்லை.

https://www.youtube.com/watch?v=dOtKHBLlrEc

ஹீரோ வாய்ப்பு பற்றி சொன்னது:

அந்த இடத்தை நிரப்பதான் நான் வந்துள்ளேன். அவரைப் போல அடுத்த நடிகர் சங்க தலைவராகவும் ஆகுவேன். எனக்கு வரவிருக்கும் மனைவி திரிஷா, சமந்தா போல இருந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருந்தது தற்போது சோசியல் மீடியாவில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிலர் திவாகரின் பேச்சை ட்ரோல் செய்து வந்தாலும் சிலர் கண்டித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full