Bigg Boss 2 Exclusive: இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான்.! வெளிவந்த உண்மை தகவல்.!

By Ajju · 1/7/2018
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் கடத்தை நெருங்கி இருந்த நிலையில் மும்தாஜ், பொன்னம்பலம், ஆனந்த் வைத்தியநாதன், மமதி சாரி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் இருந்து வந்தனர். கடந்த ஒரு வாரமாக இவர்கள் 4 பேருக்கும் மக்கள் வாக்களித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களை சந்த்தித்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லப்போவது யார் என்று அறிவிப்பார் என்று ஆவலாக காத்துக்கொண்டிருந்த நிலையில், கமல் பொன்னம்பலம் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளர் என்று அறிவித்து விட்டார் . இந்நிலையில் மீதம் உள்ள 3 போட்டியாளர்களில் யார் வெளியேற போகிறார்கள் என்று நடிகர் கமல் இன்று அறிவிப்பார். ஆனால், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது மமதி தான் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் அவர் தான் கம்மியான வாக்குகளை பெற்றுள்ளார் என்று சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதே போல நேற்று அகம் டிவி வழியாக போட்டியாளர்களை கமல் சந்தித்து பேசினார். அப்போது சக போட்டியாளரான வைஷ்ணவி, மமதி போலியாக இருக்கிறார் என்று கூற பார்வையாளர்கள் அனைவருமே அதனை வரவேற்கும் வகையில் கூச்சல் போட்டனர். இதனால் மமிதிக்கு வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லையோ என்ற ஒரு சந்தேகமும் மனதில் எழுகிறது. போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும். போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க "Bigg Boss Vote Tamil" என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full