பிக் பாஸ் நடிகையையும் விட்டு வைக்காத கொரோனா - அவரே பதிவிட்டுள்ள பதிவு.

By Rajkumar · 21/3/2021

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

அதே போல தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஷால் மற்றும் அவரது தந்தை, சரத் குமார், கருணாஸ் என்று பல நடிகர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர். சமீபத்தில் நடிகர் சூர்யா கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். இப்படி ஒரு நிலையில் , ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நிக்கி தம்போலி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

வட இந்திய பெண்ணான இவர் தெலுங்கில் இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் காஞ்சனா 3 படத்தில் மட்டும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full