தனது கிளாமர் புகைப்படங்களை விமர்சிக்கும் நபர்களுக்கு ஜூலி கொடுத்த காட்டமான பதிலடி.

By ·

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

https://twitter.com/lianajohn28/status/1351794850547462145

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.

அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை. ஆனால், சமீப காலமாக மற்ற பிக் பாஸ் நடிகைகளின் அக்கப்போரை பார்த்துவிட்டு. இவர்களுக்கு எல்லாம் ஜூலி எவ்வளவோ தேவையில்லை என்று கூற ஆரம்பித்துவிட்டனர். இதனால் சமீப நாட்களாக ஜூலிக்கு ஓரளாவிற்கு சமூக வலைத்தளத்தில் ஹேட்டர்ஸ்களின் சதவீதம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த லாக் டவுன் சமயத்தில் மட்டும் அம்மணி ஏக்கச்செக்க போட்டோ ஷூட்களை நடத்திவிட்டார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் கடற்கரையில் படு கிளாமராக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இப்படி ஒரு நிலையில் ஜூலியை விமர்சிக்கும் நபர்களை நெட்டிசன் ஒருவர் விமரித்து இருந்தார். அதனை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full