'பிக்பாஸ்' ரித்விகாவின் திருமணம் நின்று விட்டதா? அவரே கொடுத்த பதிவு - அதிருப்தியில் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை ரித்விகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பரதேசி’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதையும் பெற்றார். அதன் பின்னர் தொடர்ச்சியாக இவர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் ரித்விகா சிறப்பாக விளையாடி டைட்டில் வின்னரும் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்தார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி கோப்பையை தட்டிச் சென்றதால் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி ஹீரோயினி வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும், இவர் விடாமுயற்சியுடன் போராடி வருகிறார்.
ரித்விகா குறித்த தகவல்:
இதை அடுத்து ரித்விகா அவர்கள் படங்கள், வெப் சீரிஸ் என்று பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இதற்கிடையே கடந்த ஆண்டு நடிகை ரித்விகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் வினோத் லக்ஷ்மனை தான் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள்.
ரித்விகா திருமணம்:
இதை பார்த்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதோடு திருமணம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி என்று கூறப்பட்டது. பின் ரித்விகா திருமணம் தள்ளிப் போனது. இது தொடர்பாக ரித்விகா, குடும்ப காரணங்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக என்னுடைய திருமணம் ஒத்தி வைக்கப்படுகிறது. உங்களுடைய புரிதலுக்கு நன்றி என்று கூறியிருந்தார்.
ரித்விகா சொன்னது:
புதிய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் ஒரு வருடம் மேலாகியும் திருமணம் குறித்து எந்த அப்டேட் வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் ரசிகர், உங்கள் திருமணத்தில் ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரித்விகா, நினைத்தது நடக்கவில்லை என்று சொல்லி தன்னுடைய திருமணம் நின்று விட்டதை அறிவித்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் ரித்விகாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.