பாத்திமா பாபுவா இது.! இளம் வயசு போட்டோவ பார்த்தா பாத்திமா ஆர்மில சேர்ந்துடுவீங்க.!

By Rajkumar · 29/6/2019

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கொண்டுள்ளனர். அந்த வகையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான பாத்திமா பாபு ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகம் தான்.

1964 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த பாத்திமா பாபு தனது பயணத்தை தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் தமிழில் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

தமிழில் 1996 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'கல்கி' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் ஏசியா நெட் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

https://twitter.com/fathimababuarmy/status/1144661533856632832

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் மும்தாஜ் இருந்தது போல தற்போது பாத்திமா பாபு மற்ற போட்டியாளர்களை பெற்ற பிள்ளைகளை பார்த்து வருகிறார் அவர்களுக்குள் சண்டை வந்தாலும் அதனை நிதானமாக பேசி தீர்த்து சுமுகமாக முடித்து விடுகிறார் பாத்திமா பாபு. இதனால் இவருக்கும் ஆர்மிகள் துவங்கியுள்ளது.

சமீபத்தில் பாத்திமா பாபு ஆர்மியின் சமூக வலைத்தள பக்கத்தில் பாத்திமா பாபுவின் இளைய வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் பாத்திமாவை கண்டு ரசிகர்கள் ஷாக்கடிந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full