இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.! இறுதியாக ரகசிய அறையை பயன்படுத்திய பிக் பாஸ்.! லேட்டஸ்ட் அப்டேட்.!

By Rajkumar · 7/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். அதுபோக வனிதா வெளி வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த வாரம் தலைவராக நியமனம் செய்து அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டு விட்டார் பிக் பாஸ்.

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின், முகென் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். மேலும், இந்த வாரம் வனிதா தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்யமுடியவில்லை. அதே போல அவருக்கு ஒரு சிறப்பு பவரும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அது என்ன பவர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஒரு வேலை அது என்ன என்பது இன்று தெரிய வரலாம். தற்போது கிடைத்த தகவலின்படி இந்த வார ஓட்டிங்கில் கவினுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்துள்ளது. மேலும், ஷெரின் தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுவந்ததாக கூறப்பட்டது.

அவருக்கு அடுத்தபடியாக சேரன் தான் குறைவான வாக்குகளை பெற்று வந்துள்ளார். சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் கடைசி இடத்தை பிடிப்பதற்கான போட்டி நடந்து கொணடே வந்தது. தற்போதைய நிலவரப்படி சேரன் தான் ஷேரினை விட கொஞ்சம் கம்மியான வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த வாரம் சேரன் வெளியேற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இறுதியாக இந்த வாரம் ரகசிய அறையை பயன்டுத்தியுள்ளனர். ஆம், இந்த வாரம் சேரன் ரகசிய அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். எனவே, இந்த வாரம் நிகழ்ச்சியில் ஸ்வாரசியதற்கு பஞ்சமே இருக்காது என்று எதிர்பார்க்கபடுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full