பிக் பாஸ் வரலாற்றில் 'Eviction Free Paas'-ஐ பெற்ற முதல் போட்டியாளர் இவர் தான் - அடித்தது ஜாக்பாட்.

By Rajkumar · 13/10/2020

பிக் பாஸின் 'Eviction Free Paas' வென்றுள்ள நபர் தற்போது உறுதியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்று கிழமை (அக்டோபர் 4 ) துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிகரமாக நேற்றோடு வெற்றிகராக முதல் வாரத்தை நிறைவடைந்து இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இதுவரை போட்டியாளர்கள் முழுமையாக ஒரு வாரம் கழித்து உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே எந்த ஒரு பெரிய பிரச்சினையும் ஏற்படவில்லை. இடையில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு மட்டும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதேபோல முதல் வாரம் என்பதால் கடந்த வாரம் எந்த ஒரு எலிமினேஷனும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஏற்கனவே துவங்கிவிட்டது. இதில் ஏற்கனவே ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா, அஜீத், ஷிவானி, சுரேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் சுரேஷ் இந்த வார தலைவராக தேர்ந்துடுக்கபட்டிருந்ததால் அவரை இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் சனம் ஷெட்டி (11 Vote), ஷிவானி (6 Vote) சம்யுக்தா(5 vote) ரேகா (4 vote), ஆஜீத் (2 Vote), ரம்யா (2 Vote), கேப்ரில்லா (2 vote) ஆகியோர் இடம்பெற்றுள்னர்.இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டு இருந்தது. அதாவது பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 'Eviction Free Paas' என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கைப்படற இந்த வாரம் தகுயற்றவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேரில் கலந்து பேசி இறுதியில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு 'Eviction Free Paas' ஐ வெற்றி பெரும் நபர் இந்த சீசன் முழுதும் ஏவிக்ஷனில் இடம்பெற மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற 8 பேரும் காரசாரமாக விவாதத்தினர். கடைசியில் சுரேஷ், ரம்யா, அஜீத் இருந்த நிலையில் சுரேஷ்ஷின் தந்திர வேலையை கண்டுபிடித்த ரம்யா இறுதியில் அவரை வெளியேற வைத்தார். இதில் இறுதியில் அஜீத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே இவர் இந்த சீசன் முழக்க நாமினேஷனில் இடம்பெறவே மாட்டார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full