ஆவளுடன் எதிர்பார்த்த குறும்படம். அதுவும் சண்டே ட்ரீட்டாக ரெண்டாம். யாரை பற்றி தெரியுமா ?

By Rajkumar · 29/11/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி விட்டது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா என்று நான்கு போட்டியாளர்கள் மட்டுமே வெளியேறி இருக்கிறார்கள். பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வருவதால் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.மேலும், அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பிரச்சினைகளை கமல் அலசி ஆராய்வார். ஆனால், இந்த சீசனில் இதுவரை அப்படி எதுவுமே நடந்தது கிடையாது. அவ்வளவு ஏன் ரசிகர்களுக்கு அறிவுரை என்பதை கூறுவதற்கு பதிலாக டிப்ஸ் என்றுதான் கூறி வருகிறார்.

இந்த சீசன் கிட்டத்தட்ட பாதி சீசனையே முடிந்த நிலையில் இதுவரை ஒரு குறும்படம் கூட போடப்படவில்லை என்பது ரசிகர்களின் ஏமாற்றமாக இருந்து வருகிறது.இந்த வாரம் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் ஓடியது. பாலாஜி காலை நீட்டி பேசியது, சம்யுக்தா, வளர்ப்பு குறித்து பேசியது மற்றும் தாய்மை குறித்து பேசியது. ரியோ,சனம் ஷெட்டியை அசிங்கமாக கேட்டு விடுவேன் என்று சொன்னது. சுவாரசியம் கம்மி என்பதை எதன் அடிப்படையில் போட்டியாளர்களை தேர்வு செய்கிறார்கள் என்பதற்கான விளக்கம் போன்ற பல விஷயங்களை கமல் இந்த வாரம் கேட்க வேண்டும் என்பது தான் ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

நேற்றய நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் அன்பு பஞ்சாயத்து மற்றும் குரூப் பஞ்சாயத்து, சுவாரசியம் குறையான போட்டியாளர்கள் தேர்வுக்கான விளக்கம் போன்றவற்றை பற்றி கமல் பேசி இருந்தார். ஆனால், நேற்றும் குறும்படம் எதுவும் போடப்படவில்லை. இப்படி ஒரு நிலையில் இன்று குறும்படம் ஒளிபரப்பாக இருக்கிறதாம். அதுவும் சன்டே டபுள் ட்ரீட்டாக ஒன்றல்ல இரண்டு குறும்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

https://twitter.com/Roja_Rose21/status/1331133940170584065

அது என்னவெனில் இந்த வாரம் நடைபெற்ற கால் சென்டர் டாஸ்கின் போது சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா பேசுகையில் சம்யுக்தா 'கலீஜ்' என்ற சொல்லை பயன்படுத்தியது குறித்தும், அதே போல வளர்ப்பு சரியில்லை என்று கூறியது குறித்தும் சம்யுக்தாவிற்கு குறும்படம் போடப்பட்டுள்ளது. அதே போல இந்த இரண்டு குறும்படம் போடபபட்டு இந்த வாரம் சம்யுக்தா வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full