கண் முன்னே மகள் வந்தும் Taskகை கடைபிடிக்கும் ஆரி - இப்போ புரியுதா இந்த மனுசனுக்கு ஏன் இவ்ளோ fansனு. Unseen Video இதோ.

By Rajkumar · 31/12/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

https://twitter.com/BBPFriends20/status/1344627934774972417

இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் Freeze Task துவங்கப்பட்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.இது நாள் வரை சண்டை சச்சரவு என்று போய்க்கொண்டு இருந்த பிக் பாஸ் வீட்டில் இந்த டாஸ்க்கிற்கு பின்னர் தான் கொஞ்சம் ஜாலியாகவும், எமோஷனலாகவும் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை ஷிவானி, பாலாஜி, சோம், ரம்யா பாண்டியன் ஆகியோர்களின் குடும்பத்தினர் உள்ளே சென்று வந்துவிட்டனர்.

இன்று வெளியான ப்ரோமோவில் கேப்ரில்லா மற்றும் ஆஜீத் குடும்பத்தினர் வந்திருந்தனர். இதற்கெல்லாம் மேலாக ஆரியை சந்திக்க அவரது குடும்பத்தில் இருந்து யார் வருவார்கள் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது ஆரியை சந்திக்க அவரது மனைவியும் மகளும் உள்ளே சென்று ஆரிக்கு இன்ப கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் Unseen ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

https://twitter.com/Vsrir/status/1344623772855373825

அதில் ஆரியின் மகள் மெயின் டோர் வழியாக வர ஆரிக்கு Freeze என்று அறிவித்துவிடுகிறார் பிக் பாஸ். பின்னர் ஆரியின் மகளை மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அழைத்து வந்தனர். மகளை பார்த்தும் தனக்கு டாஸ்க் தான் முக்கியம் என்று கண்ணீரோடு இருக்கிறார் ஆரி. பின்னர் ஆரிக்கு ரிலீஸ் சொல்ல தனது மகளை கட்டித் தழுவியுள்ளார். உண்மையில் இன்று வெளியான மெயின் ப்ரோமோவை விட இந்த ப்ரோமோ தான் நன்றாக இருக்கிறது இதையெல்லாம் ஏன் போட மாற்றீங்க என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full