ஐயயோ, மருத்துவமனையில் திடீரென அனுமதியாகியுள்ள கேபி - என்ன ஆச்சி ? வீடியோவை கண்டு பதறிய ரசிகர்கள்.

By subhashini · 9/10/2022

விஜய் டிவி நடிகை கேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கேப்ரில்லா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா சார்ல்டன். இவர் விஜய் தொலைக்காட்சி மூலம் தான் மக்களுக்கு பரிச்சியமானார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிகம் ஆர்வம்.

இதனால் இவர் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். பின் நிகழ்ச்சியில் இவர் டைட்டில் பட்டத்தையும் வென்று இருந்தார். பின் இவருக்கு சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் நடித்தார். பின் தனுஷின் 3 உட்பட சில படங்களில் நடித்து இருந்தார் கேப்ரில்லா.

கேப்ரில்லா குறித்த தகவல்:

சின்னத்திரை பிரபலத்தினால் கேப்ரில்லாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்தும் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தார். பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட கேபி 5 லட்ச ருபாய் பணத்துடன் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரில்லா சின்னத்திரையில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று இருந்தார். அதிலும் இவர் BB ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்குபெற்று இருந்தார். தற்போது இவர் ஈரமான ரோஜாவே 2வில் நடிக்கிறார்.

https://www.youtube.com/watch?v=D_v0JJipqHU

ஈரமான ரோஜாவே 2 சீரியல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் தொடர் தான் ஈரமான ரோஜாவே 2. ஏற்கனவே, ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி என பல நடிகர்கள் நடிக்கிறர்கள்.

கேபி நடிக்கும் சீரியல்:

இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை பல திருப்பங்களுடன்,விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் காவியா கதாபாத்திரத்தின் மூலம் கேப்ரில்லா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார்.

கேபி பதிவிட்ட புகைப்படம்:

இந்த நிலையில் கேபி பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கேபி மருத்துவமனையில் இருக்கும் மாதிரியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்துதான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். ஆனால், இது ஈரமான ரோஜாவே சீரியலின் சூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இதை விளையாட்டுக்காக அவர் பதிவிட்டதாகவும் கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full