முதன் முறையாக தங்களது செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ்-நிஷா ஜோடி.

By Rajkumar · 9/11/2019

வெள்ளித்திரையை போன்றே சின்னத்திரையில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை அனைவருக்கும் தெரியும். விஜய் டிவியில் 'நெஞ்சம் மரப்பதில்லை' என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

https://www.instagram.com/p/B4oL_5ng5xi/

நடிகரான கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'அபியும் நானும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்துளளார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். தொலைக்காட்சி தொகுப்பாளியான இருந்த நிஷா சீரியல்களிலும் நடித்து பிரபலமாணவர்.

இதையும் பாருங்க : அரை குறை ஆடையில் கடற்கரையில் போஸ். பகல் நிலவு சீரியல் நடிகை ஷிவானியா இது.

கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மஹாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடரில் நடித்து பிரபலத்தின் உச்சிகே சென்றார். சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த நிஷா கடந்த சில மாதத்திற்கு முன்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகினார். இதற்கு தான், கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நிஷா.

சமீபத்தில் கணேஷ் வெங்கட் ராமன் தனது கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மேலும், அதில் சீமந்தம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு கடந்த ஜூன் 29 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் கணேஷ் வெங்கட் ராமன். மேலும், தங்களது மகளுக்கு சமைரா என்ற பெயரை வைத்துள்ள இந்த தம்பதியினர் சமீபத்தில் தனது குழந்தையுடன் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full