அந்தரத்தில் தொங்கியபடி லிப் லாக் முத்தம். புகைப்படத்தை பதவிட்ட கணேஷ் மனைவி நிஷா.

By Rajkumar · 18/8/2020

பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை அனைவருக்கும் தெரியும். விஜய் டிவியில் 'நெஞ்சம் மரப்பதில்லை' என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

நடிகரான கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'அபியும் நானும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்துளளார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

அதே போல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நிஷா கடந்த சில மாதத்திற்கு முன்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகினார். கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு கடந்த ஜூன் 29 பெண் குழந்தை பிறந்தது. 10 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கணேஷ். மேலும் தனது மகளுக்கு சமைரா என்று பெயர் வைத்துள்ளனர்.

https://www.instagram.com/p/CEBDFOdjKbC/?igshid=1kukb7rrxqf4m

குழந்தை பிறந்த பின்னர் நிஷா, எந்த தொடரிலும் நடிக்கவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிஷா, அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது கணவருடன் பங்கி ஜம்ப் செய்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அந்தரத்தில் தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து இருக்கிறார் .

behindtalkies AMP · Quick view
View full