சட்ட மன்றத்தில் கலக்கப்போவது யார் தான், வடிவேலுவ மிஞ்சிடுவார் - ஸ்டாலின் வெற்றியை கேலி செய்த காயத்ரி ரகுராம்.

By Rajkumar · 3/5/2021

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

https://twitter.com/Mani95472484/status/1389201224931573762

கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி நேற்று (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்றுது. இதில் ஆரம்பம் முதலே பல்வேறு தொகுதிகளில் தி மு க தான் முன்னிலை வகித்து வந்தது. இப்படி ஒரு நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது.

இதையும் பாருங்க : என்னதான் அழகான போட்டோ போட்டாலும் நான் என்பதால் லைக் போட மாட்டாங்க - பிக் பாஸ் ஜோடிக்கு பின் ஜூலி பதிவிட்ட புகைப்படம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இலயோலா கல்லூரி வளாகத்தில் பெற்றுக் கொண்டு, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். முதன் முறையாக முதலமைச்சராக பதிவு ஏற்கப்போகும் ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/manimaran3094/status/1389229794416496646

இப்படி ஒரு நிலையில் ஸ்டாலின் முதல்வரானதால் மீம் கிரியேட்டர்களுக்கு நல்ல வேட்டை என்று காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், மாநில சட்டசபை வேடிக்கையாக இருக்கும். மீம் கிரியேட்டர்களுக்கு நல்ல வேட்டை. பிட் பேப்பருடன் அல்லது இல்லாமல் அவரால் இதைச் செய்ய முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மாநில சட்டசபையிலேயே கலக்போவாடு யாரு .. ஒரு நாள் கூட தவறவிட மாட்டேன். நான் அவரது நகைச்சுவைக்கு பெரிய ரசிகன். வடிவேலுவை மிஞ்சிடுவார் என்று கேலி செய்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full