'எனக்கு அந்த பொண்ண முன்னாடியே தெரியும், அந்த பொண்ணு' - தனலட்சுமி குறித்த பேசிய GP முத்து.

By Arun · 14/10/2022

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சண்டை சக்கரவுகளுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த சீசனில் முதல் வாரமே பிக் பாஸ் வீட்டில் பஞ்சாயத்தை துவங்கி இருப்பது ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் துவங்கி இருந்தது. இந்த சீசனில் tik tok மூலம் பிரபலமான சிலருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் மிக முக்கியமான நபர் ஜி பி முத்து தான். பொதுவாக பிக் பாஸ் ஆரம்பித்த சில வாரங்களில் தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கப்படும். ஆனால், ஜிபி முத்துவிற்கு பிக் பாஸ் தொடங்கும் முன்னரே ஆர்மிக்கள் அதிகம் இருந்தது.

இதனால் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதலே ஜி பி முத்துவிற்கு சமூக வலைதளத்தில் அதிக ஆதரவு கிடைத்திருந்தது. மேலும், யூடுயூபில் அவர் செய்த அதே வெகுளித்தமான செயல்களை பிக் பாஸிலும் அவர் செய்து வருவதால் அவருக்கு ஆர்மி படை மேலும் அதிகமாகி இருக்கிறது. இதனால் அவரை எதாவது தவறாக பேசிவிட்டால் அவரின் ஆர்மி பொங்கிவிடுகிறது. இப்படி ஒரு நிலையில் ஜி.பி முத்துவின் ரசிகர்கள் தனலட்சுமியை திட்டி தீர்த்து வருகிறார்கள். பிக் பாஸில் தற்போது club house என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜி பி முத்து Vs தனலட்சுமி :

இதில் ஜிபி முத்து, ஆயிஷா,. தனலட்சுமி, ஜனனி ஆகிய நால்வரும் ஒரே அணியில் தான் இருக்கிறார்கள். இந்த டாஸ்கின் அடிப்படையில் ஆயிஷா ஜிபி முத்துவை nominate செய்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து பிற அணிகளுக்கும் வேலை செய்கிறார் என்பதுதான். இந்த காரணத்தால் ஜிபி முத்து, ஆயிஷா, தனலட்சுமி ஆகியோருக்கு ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜிபி முத்து கார்டன் ஏரியாவில் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஆயிஷாவும் தனலட்சுமி அவரிடம் பேச முயன்றனர்.

நான் நடிக்கிறேனா ? :

அப்போது ஜிபி முத்து 'தயவு செய்து இங்கு வராதீங்க' என்று சொன்னார். அதற்கு தனலட்சுமி 'நீங்க யார் அதை சொல்ல' என்று கூற அதற்கு ஜி பி முத்து நீங்கள் இருவரும் தான் நான் மன்னிப்பு கேட்ட பின்னரும் முகத்தை திருப்பி முறைத்தீர்கள் என்று கூற அதற்கு ஆயிஷாவும் தனலட்சுமி நாங்கள் அப்படி முறைக்கவே இல்லையே என்று ஜி.முத்துவிடும் வாக்குவாதம் செய்தனர். உடனே தனலக்ஷ்மி 'ரொம்ப நடிக்காதீங்க' என்று சொன்னதும் செம டென்ஷனான ஜி பி முத்து, எழுந்து வந்து தனலட்சுமி இடம் நான் நடிக்கிறேன் என்று நீ பார்த்தியா என்று வாக்குவாதம் செய்தார்.

தனலட்சுமிக்கு எதிராக Gp முத்து ஆர்மி :

மேலும், கேமரா முன் சென்ற ஜிபி முத்து 'நான் நடிக்கிறேனா இல்லையா என்பது என் நண்பர்களுக்கு தெரியும் என்று கலங்கியபடி கூறியிருந்தார். இதன் பின்னர் டைனிங் ஏரியாவில் தனலட்சுமி கூறிய அந்த வார்த்தையை நினைத்து ஜி பி முத்து கண்ணீருடன் அமர்ந்திருந்தார். இதை கண்ட மற்ற போட்டியாளர்களும் அவரை சமாதானம் செய்தனர். அதுமட்டுமின்றி உள்ளே ஒரு இடத்தில் தனலட்சுமி நிவாஷினி உடன் பேசுகையில், ஜிபி முத்தா, அந்த ஆளு ஒரு லூசு என கூறி உள்ளார் . அந்த வீடியோவை பகிர்ந்து யார் லூசுனு கமல் சார் வர்றப்ப தெரியும் என ஜிபி முத்து ஆர்மியினர் கூறி வருகின்றனர்.

தனலட்சுமி குறித்து ஜிபி முத்து :

இப்படி ஒரு நிலையில் தனலட்சுமியை தனக்கு பிக் பாஸ் முன்னரே தெரியும் என்று ஜிபி முத்து பேசி பேசி இருக்கிறார். இதுகுறித்து அமைத்தவானனிடம் அவர் பேசிய போது '"எனக்கு அந்த பொண்ண முன்னாடியே தெரியும். அந்த பொண்ணு ரொம்ப நல்ல புள்ள. . டிக்டாக் பண்றப்போ தெரியும். இப்போது தெரிந்து அவரிடம் நான் பேசவில்லை. முன்பே இந்த பெண்ணை பற்றி தெரியும், டூயட் வீடியோ எல்லாம் செய்திருக்கிறேன் என்பதால் தான் அவரிடம் போய் பேசினேன். அந்த உரிமையில் தான் அவரிடம் வாமா போம்மா என பேசினேன்" என்று கூறியுள்ளார்.

'

Tamil Behind Talkies AMP · Quick view
View full