பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அஜித் படத்தில் ஜி பி முத்து நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கு நினைவிற்கு வருவது ஜி பி முத்து தான். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி பி முத்து. இவர் 3ஆவது வரைக்கும் தான் படித்து இருக்கிறார். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:

மேலும், யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான். ஆனால், இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

ஜிபி முத்து நடித்த படம்:

இது பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது. மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 14 நாட்கள் இருந்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முன்பிருந்ததை விட அதிகமாக ஜிபி முத்துவிற்கு ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது . மேலும், நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு ஜி பி முத்து சன்னி லியோனுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கடந்திருந்தார். இவர் சன்னி லியோனுடன் இணைந்து ‘Oh My Ghosh’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement

அஜித் படத்தில் ஜிபி முத்து:

காமெடி நடிகர் சதீஷ், குக்கு வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அஜித் படத்தில் ஜிபி முத்து நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, ஜிபி முத்துவிற்கு அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஜி பி முத்துவே கூறியிருக்கிறார்.

Advertisement

அஜித் நடிக்கும் படங்கள்:

தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்கே ஜிபி முத்து தான். ஆனால், இவர் அஜித் உடன் எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தை தொடர்ந்து அஜித் அவர்கள் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

Advertisement