ஆரி பற்றிய காண்டில் கூடி பேசிய போட்டியாளர்கள். அதுவும் ஆஜித் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

By Rajkumar · 25/12/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் என்பது ஒரு நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

https://twitter.com/Mathusa84811885/status/1342388360791302144

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நபர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் நடிகரானஆரியும் ஒருவர். நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஆரி. அதன் பின்னர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நெடுஞ்சாலை திரைப்படத்திற்குப் பின்னர் இவர் நடித்த எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டிருக்கிறார். நடிகர் ஆரி ஆரம்பத்தில் இருந்தே அதிகம் பேசுகிறார், மற்றவர்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறுகிறார் என்று பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பல போட்டியாளர்களும் இவருக்கு முத்திரை குத்தினார்கள்.

அதேபோல ஆரம்பத்தில் இருந்தே இவருக்கும் பாலாஜிக்கும் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டேதான் இருந்தது. தற்போது இருக்கும் நிலையில் வீட்டில் இருக்கும் எந்த போட்டியாளரும் ஆரிக்கு ஆதரவாக இல்லை. மேலும், வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே ஆரிக்கு எதிராகத்தான் செயல்படுகிறார்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதற்கேற்றார்போல ஆரி பலமுறை நாம் ஏன் ஆகியும் இருக்கிறார். ஆனால், இதுவரை மக்களால் காப்பாற்றப்பட்டும் வருகிறார்.

https://twitter.com/Devikum78918512/status/1342370457882804225

அந்த வீடியோவில் பேசிய உள்ள பாலாஜி ஒவ்வொரு வாரமும் ஆரி எப்படி முதலில் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். ஒருவேளை நம்மை கலாய்க்க தான் அவரை முதலில் காப்பாற்றுகிறார்களா என்று கூறியிருந்தார். அதற்கு அஜித் எனக்கு தெரிஞ்சி இங்கு என்ன வேணா பன்னிட்டு கேமரா முன்னாடி போய் பேசிட்டா எல்லாம் சரியாகிவிடும் என்று இருக்கும் என்று கூறியுள்ளார். ஆரி பற்றி பாலாஜி பேசியது கூட ஓகே தான். ஆனால், ஆஜீத் பேசியது தான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

behindtalkies AMP · Quick view
View full