அட, லியோ படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம் - செட்டில் இருந்து வெளியான புகைப்படம் இதோ.
விஜயின் லியோ படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=kcTV3G-Wi34
இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
லியோ படம்:
மேலும், இந்த லியோ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை லியோ படத்திற்கு பல கோடி புக்கிங் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் பிக்பாஸ் பிரபலம் நடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/mbtvtelugu/status/1710617871985025397
பிக் பாஸ் ஜனனி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஜனனி. இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத புது நபர்களில் ஜனனியும் ஒருவர். இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனனிக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்தது.
நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தது. இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இவர் அமுதவாணனின் கைப்பாவையாக இருந்தார் என்று பல சர்ச்சைகள் எழுந்தது. இருந்தாலும் ஜனனி முழு முயற்சியுடன் விளையாடியிருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
லியோ படத்தில் ஜனனி:
அந்த வகையில் தற்போது இவர் விஜயின் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் கூட பிக் பாஸ் ஜனனியிடம் கேட்டபோது அவர் சொல்ல முடியாது என்று மறுத்து விட்டார். இந்நிலையில் லியோ படத்தில் பிக் பாஸ் ஜனனி நடித்திருந்த காட்சியின் புகைப்படம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ம பிக் பாஸ் ஜனனி ஆச்சே என்று உற்சாகத்தில் கமெண்ட் போட்டு புகைப்படத்துக்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.