'காவாலா' பாடலுக்கு பிக் பாஸ் ஜனனி போட்ட ஆட்டம் - வைரலாகும் வீடியோ இதோ.

By Rajkumar · 23/7/2023

காவாலா பாடலுக்கு நடனமாடிய பிக் பாஸ் ஜனனியை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

குறிப்பாக, கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை எனவே இவருக்கும் “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Janany_fp (@janany_kj__f_p)

ஜெயிலர் படத்தின் பாடல்:

அதோடு இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இப்படி ஒரு நிலையில் தான் இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடலானது துள்ளல் அதிகம் உள்ள கலக்கலான பாடலாக வெளியாகியுள்ளது. தற்போது பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த பாடலுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலருமே நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஜனனியை கலாய்க்கும் நெட்டிசன்கள்:

அந்த வகையில் பிக் பாஸ் ஜனனியும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ஜனனி ரசிகர்கள் சூப்பர் அருமை என்றெல்லாம் பாராட்டி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், நெட்டிசன்கள், என்னடா இது காவாலா பாட்டுக்கு வந்த சோதனை. பள்ளி ஆண்டு விழாவில் ஸ்டெப் தெரியாமல் குழந்தைகள் டான்ஸ் ஆடுவது போல ஆடுகிறார். காவாலா பட்டையும், தமன்னாவையும் கலாய்க்கும் வகையில் ஜனனியின் நடனம் இருக்கிறது என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Janany_fp (@janany_kj__f_p)

ஜனனி குறித்த தகவல்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி. இவரும் இலங்கை தமிழர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவர் நிறைய ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். இருந்தாலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்தும் இவர் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full