அடையாளம் தெரியாத கெட்டப், குகை அருகில் ஷூட்டிங், ரிஸ்க் எடுத்து நடித்து வரும் பிக் பாஸ் நடிகர். கைகொடுக்குமா கடின உழைப்பு.
தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால், அனைவரும் டாப் நடிகர்களாக ஜொலித்து விடுவது இல்லை. அந்த வகையில் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தும் பெரிய நடிகராக பெயர் எடுக்க தவறியவர் நடிகர் ஜித்தன் ரமேஷ். இவருடைய தந்தை ஆர்பி சவுத்ரி ஆவர். இவர் சினிமா உலகில் மிகப்பிரபலமான தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதுமட்டும் இல்லாமல் இவர் நடிகர் ஜீவா அவர்களின் சகோதரரும் ஆவார். ரமேஷ் அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார்.
இவர் முதலில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த வித்யார்த்தி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.அதற்கு பின் இவர் இயக்குனர் ஆர்.கே.வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அந்த படத்திற்கு பின்னர் இவரை ஜித்தன் ரமேஷ் என்றே அழைத்து வந்தனர்.
இவர் ஜீவாவிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், நடிகர் ஜீவா அளவிற்கு இவரால் பெயரெடுக்க முடியவில்லை. தமிழில் இதுவரை 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார் ரமேஷ்.ஆனால், அந்த 10 படங்களும் தோல்வியில் தான் முடிந்தது. மேலும், 2011 ஆம் ஆண்டு வெளியான “ஓஸ்தி ” படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், அதற்கு பின்னர் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்னர் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஒரு நடிகனின் வாக்கு ஆண்டு ” படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜித்தன் ரமேஷ். அதன் பின்னர் விஜய் நடித்த “ஜில்லா” படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் ஒரு சில நொடிகளுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.நீண்ட வருட இடைவேளைக்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ரமேஷுன் “ஜித்தன் 2” படமும் எதிர்பார்த்த அளவில் அளவிற்கு வெற்றியடையவில்லை.
இறுதியாக உங்கள போடணும் சார் என்ற படத்தில் ரமேஷ் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் தோல்வி தான் அடைந்தது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். நிகழ்ச்சிக்கு பின் இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதிலும் இவர் அன்பு கேங்குடன் சேர்ந்து தன் பெயரையும் கொஞ்சம் டேமேஜ் செய்துகொண்டார். தற்போது ஜித்தன் ரமேஷ் "ரூட் நம்பர் 17" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் நீளமான முடி, தாடி வைத்து ஜித்தன் ரமேஷ் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இந்த படத்திற்காக மாறி இருக்கிறார். இந்த படத்திற்காக தென்காசி அருகில் ஒரு மிகப்பெரிய குகை நிலத்துக்கு அடியில் செட் அமைத்து அங்கு ஷூட்டிங் நடத்தி இருக்கிறார்கள். காற்றோட்டம் இல்லாத அந்த குகையில் 55 டிகிரி வெப்பநிலையில் தான் தொடர்ந்து 22 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி இருக்கின்றனர். அதில் ரிஸ்க் எடுத்து ஜித்தன் ரமேஷ் நடித்து கொடுத்திருக்கிறாராம்.