உங்க அண்ணன் உங்க கூட சேருவாரா?ரசிகர் கேள்விக்கு ஜோவிகா அளித்த நச் பதில். வனிதா பொண்ணாச்சே.

By Rajkumar · 18/3/2024

தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார் என்று சொல்லலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆனால், இவருக்கும் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பின்னர் இவர் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார்.அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவைடந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

வனிதாவின் திருமண வாழ்க்கைகள் :

ஆனால், அந்த நிகழ்ச்சியிலும் பிரச்சனை செய்துவிட்டு பாதியில் வெளியேறினார் வனிதா. ஆனாலும், இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.வனிதா சினிமா உலகிலும், சோசியல் மீடியாவிலும் பிசியாக இருந்தாலும் இவருடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியைத்தான் சந்தித்து இருக்கிறார்.

வனிதாவின் திருமணம் :

வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண மகளும் கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

வனிதாவின் ஒரே மகன் ஸ்ரீஹரி :

அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ். அதன் பின்னர் ஆகாஷுடன் தான் வனிதாவின் மகன் வளர்ந்து வருகிறார். மேலும், வனிதா மகன் ஸ்ரீஹரியும் நடிகராக தான் முயற்சி செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இவர் குறும்படம் ஒன்றில் நடித்து இருந்தார். அதே போல வனிதாவின் மகள் ஜோவிகாவும் தற்போது பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

தனது அண்ணன் குறித்து ஜோவிகா :

இப்படி ஒரு நிலையில் வனிதா மற்றும் ஜோவிகா இருவரும் லைவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ஜோவிகாவிடம், ”உங்களின் அண்ணனான ஸ்ரீஹரியை உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும். அவர் உங்களுக்காக திரும்ப வருவாரா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த ஜோவிகா, ”நீங்கள் யாரையாவது உண்மையாக நேசித்தால், அவர்களை அப்படியே ஃப்ரீயா விட்டு விடுங்கள். அது உங்களிடம் மீண்டும் வந்தால் அது உங்களுடையது. இல்லை என்றால் அது உங்களுடையது இல்லை” என்று பதில் அளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full