முடியாதுடி, அர்ச்சனாவை வாடி போடி என்று சொல்லி மைக்கை தூக்கி எறிந்த ஜோவிகா.

By Arun · 6/11/2023

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

https://twitter.com/divieditz26/status/1721527227970380209

மேலும், நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒருவர் வெளியேறுவது வழக்கம் தான். அந்த வகையில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு விஜய் வர்மா வெளியேற அவரை தொடர்ந்து 5 Wild Card போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் Double Eviction நடைபெற்றது.

பிரதீப்பின் வெளியேற்றம் :

இதில் வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card பெற்று வெளியேற்றப்பட்டார். பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். டைட்டில் வின்னர் வாய்ப்பு இருந்த பிரதீப்பின் வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

https://twitter.com/itzSekar/status/1721458959306174598

பிரதீப்பிற்கு எதிராக உரிமை குரல் எழுப்பியவர்கள் :

அதிலும் குறிப்பாக அவரை எதோ பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நபராக முத்திரை குத்தி அனுப்பப்பட்டது தான் பலருக்கும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. மேலும், பிரதீப்பிற்கு எதிராக விசித்ரா, அர்ச்சனா மற்றும் அன்ன பாரதியை தவிர அணைத்து போட்டியாளர்களும் பிரதீப்பால் தங்களுக்கு ஆபத்து என்பது போலவே கூறி இருந்தனர். பிரதீப் வெளியேறியதில் இருந்தே அர்ச்சனா மற்றும் விசித்ரா, மாயா & Coவிற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர்.

அர்ச்சனா Vs ஜோவிகா :

அந்த வகையில் இன்றைய டாஸ்கின் போது ஸ்மால் பாஸில் இருந்த போட்டியாளர்கள் வருவதற்கு முன்பாகவே டாஸ்க் லெட்டரை படித்துவிட்டார் பூர்ணிமா, இதனால் நாங்கள் வருவதற்கும் ஏன் டாஸ்க் லெட்டரை படித்தீர்கள் என்று அர்ச்சனா கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது ஜோவிகா, நீங்கள் பாத் ரூமில் இருக்கும் போது பொறுமையா வா என்று விசித்ரா எதற்கு சொன்னார் என்று கேட்டார்.

https://twitter.com/Mohamohan123/status/1721538828526399613

ஒருமையில் பேசிய ஜோவிகா :

அதற்க்கு அர்ச்சனா, நான் எந்த உடையும் போடாமல் இருந்தேன். Shut Up, 19 வயசு பொண்ணு மாதிரி பேசு என்று கூறினார். இதனால் கடுப்பான ஜோவிகா, நீங்க என்ன Shut Up என்று சொல்ல முடியாது என்று சொல்ல, அர்ச்சனா மீண்டும் மீண்டும் Shut Up என்று சொன்னதால் முடியாதுடி என்று சொல்லிவிட்டு, மைக்கை கழட்டிவிட்டு பிக் பாஸ் என்னை கன்பெக்ஷன் ரூமிற்கு கூப்பிடுங்கள் என்று கத்தி கூச்சலிட்டார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full