கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் படிப்பு குறித்து வனிதாவிற்கும் – விசித்ராவிற்கும் நடந்த வாக்குவாதம் தான் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இந்த விவகாரத்தில் ஜோவிகாவிற்கு ஆதரவாக சிலரும் விசித்ராவிற்கு ஆதரவாக சிலரும் சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளரும் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் இந்த விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

Bigg Boss 7 முதல் வாரத்திலேயே ஒரு விவாதத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. வனிதா விஜயகுமாரின் 18-வயது மகள் ஜோவிகா எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அதுவே அவருக்குப் பெரிய போராட்டமாக இருந்திருக்கிறது. படிப்பு வரவில்லை. கூடவே, இவர் நன்றாகப் படிக்கும் பிற மாணவருடன் ஒப்பிடப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார். அதனால் படிப்பின் மீது வெறுப்பும் வந்து அத்தோடு நிறுத்திவிட்டார். அவர் வளர்ந்த கடுமையான இளம் பருவத்துச் சூழலையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.

Advertisement

சமையல் கலையைப் படிக்கவும், நடிக்கவும் விரும்புகிற இவரை பிறர் படிக்கச்சொல்லி அறிவுரை சொல்லும்போது சினமடைகிறார். பலர் இப்படியே போதனை வழங்கியிருப்பார்கள் போல. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி பேசுவதையே விரும்பாத அவரை இந்நிகழ்ச்சி சீண்டிவிட்டிருக்கிறது. உணர்வுகளின் அலைக்கழிப்பில் அவர் பேசிய அந்த நீண்ட (நாகரிகமான) பேச்சின் நடுவே அவர் சொன்ன “எல்லாருமே படிச்சு பெரிய ஆளாகணுன்னு இல்லை” என்கிற ஒற்றை வரியை அவருக்கு எதிராகத் திருப்பிவிட்டு.

ஏதோ அவர் அடிப்படைக் கல்விக்கே எதிரி போலவும், கல்வியே தேவையில்லை என்று சொன்னது போலவும் பேசிவருவது விஷமம்.மனித சமூகத்தில் மிக மலிவாகக் கிடைக்கும் ஒன்றே ஒன்று அறிவுரைதான். அதைச் சொல்லும் விதத்தில் பக்குவமாகச் சொன்னால் மட்டுமே உரிய பலனை அளிக்கும். அந்த நிகழ்ச்சியில் விசித்ரா சொன்னதுபோல் சொன்னால் இப்படி எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும். அடிப்படைக் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது என்பது பண்பட்ட மனித சமூகம் உணர்ந்த ஒன்று.

Advertisement

இதை எல்லாரும் அறிவர். இந்நிலையில், இக்கருத்தை ஆவேசமாகச் சொல்ல முயன்ற விசித்ராவின் அணுகுமுறை அடிப்படைத் தத்துவத்தையே விவாதத்துக்கு இடமாக்கி விட்டது.விசித்ராவின் கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. முழுக்க முழுக்கச் சரி. ஆனால், வெளிப்படுத்திய விதம் முழுக்க முழுக்கத் தவறு. இந்த வயதில், இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகு உங்களுக்கு உங்கள் சொல்லிலும், செயலிலும், உணர்வுகளிலும் கட்டுப்பாடு இல்லையென்கிற நிலையில் நீங்கள் எப்படி இளைய தலைமுறையைக் குற்றம் சொல்லமுடியும்?

Advertisement

ஒரு நல்ல அறிவுரையைச் சொல்கிறேன் என்று பிறர் மனம் நோகும் அளவுக்கா சொல்வது? மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் எவ்வளவு கல்வி கற்று என்ன பயன்? என்று பதிவிட்டுள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவுகளையும் அதே சமயம் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement