தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீரதமிழச்சி ஆக தமிழகம் முழுவதும் பேசப்பட்டவர் நடிகை ஜோடி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் ரசிகர்களின் வெறுப்பை தான் சம்பாதித்தார்.

இருப்பினும் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு சின்னத்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தது. இதுவரை ஒரு சில படங்களில் நடித்திருக்கும் ஜூலி சமீபகாலமாக அடிக்கடி வித்தியாசமான உடைகளை போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஜூலி முகத்தில் காயங்களுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் இந்த வீடியோவை கண்டு பலரும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஜூலி சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி உணர்த்தத்தான் இப்படி ஒரு வீடியோவை பதிவு தருவதாக கூறி இருக்கிறார்.

Advertisement

கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வால்மீகி என்பவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்தது நாடுமுழுதும் அதிர்ச்சயை ஏற்படுத்தியது. அது குறித்து விழிப்புணவர்வை ஏற்படுத்த தான் ஜூலி இந்த வீடீயோவை பதிவிட்டாராம். மேலும் நாட்டில் 6 மாத குழந்தை துவங்கி இளம் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கும் ஜூலி, இதற்காக நாம் இப்போது குரல் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் இந்தியாவில் எத்தனையோ கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் ஒரு சில வழக்குகள் பதிவாகவே இல்லை என்று கூறியுள்ள ஜூலி, இதுவரை இதுபோன்ற விஷயங்கள் வந்தால் நாம் முதல் இரண்டு நாளுக்கு மட்டும் தான் பேசுகிறோம் அதன் பின்னர் அதனை மறந்து விடுகிறோம் என்று ஆவேசமாக பேசி இருக்கிறார். மேலும் பிறப்பில் சாதி பார்க்கும் நாம் பிறப்பு உறுப்பில் ஏன் ஜாதி பார்ப்பதில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜூலி

Advertisement
Advertisement