மரண கலாய்க்கு உள்ளான ஜூலியின் #10yearschallenge.!என்ன கொடுமை இது ஜூலி.!

By Rajkumar · 19/1/2019

கடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் #10yearschallenge என்ற ஒரு புதிய வகை இணையதள சவால் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதில் தாங்கள் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/lianajohn28/status/1086512789965877248

வலைதளவாசிகள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் இந்த பபுதிய வகை challenge மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலி #10yearschallenge-ஐ மேற்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி. இவர் அப்போது நர்சிங் படிப்பை பயின்றுவந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த போது வந்த ஜூலிக்கும் இப்போது உள்ள ஜூலிக்கும் ஏகப்பட்ட மாற்றங்கள்.

https://twitter.com/SolaiDrr/status/1086515344800268290

https://twitter.com/Wigvisay/status/1086515211819900928

இந்நிலையில் ஜூலி 10 வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டாது சமூக வளைத்தளத்தில் மிகவும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. உண்மையாகவே இந்த புகைப்படம் #10yearschallenge இல்லை பார்ப்பவர்களுக்கு தான் ஒரு challenge ஆக அமைந்துள்ளது போலும்.

behindtalkies AMP · Quick view
View full