வீட்டில் இருப்பவர்களை பிசியாக வைத்துக்கொள்ள ஜூலி செய்த செயல். கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

By Rajkumar · 27/3/2020

ஒட்டுமொத்த உலகையும் கதி கலங்க வைத்து இருக்கிறது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. முதன் முதலாக இந்த கொரோனா வைரஸ் சீனாவில் தான் பரவ தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. ந்தியாவில் 639 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தான்.

https://twitter.com/lianajohn28/status/1243016292908429314

இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள் இருப்பதால் தவித்து வருகின்றனர்.

வீட்டில் இருப்பதால் போர் அடிக்காமல் இருப்பதற்காக அனைவரும் புத்தகங்கள் படிப்பது, பெயிண்டிங் பண்ணுவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, ஜோக்ஸ், மீம்ஸ், சமைப்பது மற்றும் சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்வது என்று பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். மேலும், சில பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்களையும், புதுப்புது வீடியோக்களையும் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு அவர்கள் முதல் நாள் வெற்றி. இன்னும் இருபது நாட்கள் தான் இருக்கிறது. பத்திரமாக வீட்டில் இருங்கள் என்று ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். H.ராஜா அவர்கள் எனக்கு ஆயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று புத்தகத்தை குறிப்பிட்டிருந்தார். அதேபோல் சோசியல் மீடியாவில் நிறைய விளையாட்டு புகைப்படங்களையும் அனுப்பி மக்களை எங்கேஜ் வைத்து இருக்கிறார்கள்.

இப்படி பல பிரபலங்கள் வீட்டில் இருக்கும் போது என்ன செய்யலாம் என்று சில விஷயங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் ஜூலி அவர்கள் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நான் எப்போதும் மக்களை எங்கேஜாக வைத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலர் தாறுமாறாக ஜீலியை வறுத்து எடுத்து வருகிறார்கள். அதிலும் சிலர் இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் கேட்குதா என்றும், நல்லா இருப்பே தயவுசெய்து இப்ப இருக்கிற சூழ்நிலையில் இந்த மாதிரி எல்லாம் செய்யாத என்று பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full