உடலில் சொட்ட சொட்ட மெழுகை உருக்கி ஊற்றி, தோளில் மெழுகு வாதியை ஏற்றி போட்டோ ஷூட் - பயங்கரமான போட்டோ ஷூட் நடத்திய ஜூலி.

By Rajkumar · 9/8/2020

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் பல பேர் இருக்கிறார்கள். அதிலும் முதல் சீஸனின் பங்குபெற்ற பலர் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஜூலி. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவரது பெயர் கண்ட மேனிக்கு டேமேஜ் ஆனது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீர தமிழச்சியாக இருந்த ஜூலி பிக் பாஸுக்கு பின்னர் கழுவி ஊற்றி வந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.அதே போல பட வாய்ப்புகள் குவிந்ததால் தன்னை படு ஸ்டைலாக மாற்றிக்கொண்டார் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் விமல் நடித்த மன்னர் வகைரா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரல் நடித்திருந்தார். அதன் பின்னர் அம்மன் தாயி, அனிதா போன்ற படங்களில் நடித்தார் ஜூலி. அம்மன் தாயி படத்தின் ட்ரைலர் எப்போதோ வெளியானது, அனிதா படம் என்ன ஆனது என்று தெரியவில்லை.இப்படி இவர் நடித்த இரண்டு படங்களும் இன்னும் வெளியாகாமல் தான் இருக்கிறது. இருப்பினும் அம்மணி அடுத்தடுத்து பட வேலைகளை பார்த்து கொண்டு இருக்கிறார்.

இந்த லாக்டவுனில் மற்ற நடிகைகளை போல ஜூலியும் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதிலும் சமீபத்தில் மாடர்ன் உடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை கண்டு பலரும் வாயடைத்து போனார்கள். அந்த வகையில் சமீபத்தில் இவர் முதுகில் வத்தியை ஏற்றிக்கொண்டு படு பயங்கரமாக ஒரு போடோ ஷூட்டை நடத்தியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full