நம்பூதிரி கொண்டை, ஓணம் வேஷ்டியில் மலையாள லுக்கில் ஜூலி கொடுத்த போஸ்.

By Rajkumar · 31/8/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் எத்தனையோ பேர் பிரபலமாகினர். அந்த வகையில் நெகடிவ் பப்லிசிட்டி மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.

https://twitter.com/lianajohn28/status/1300281129941921798

ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.

அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை. ஆனால், சமீப காலமாக மற்ற பிக் பாஸ் நடிகைகளின் அக்கப்போரை பார்த்துவிட்டு. இவர்களுக்கு எல்லாம் ஜூலி எவ்வளவோ தேவையில்லை என்று கூற ஆரம்பித்துவிட்டனர். இதனால் சமீப நாட்களாக ஜூலிக்கு ஓரளாவிற்கு சமூக வலைத்தளத்தில் ஹேட்டர்ஸ்களின் சதவீதம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஓணம் பண்டிகைக்கு ஓணம் புடவை சுற்றிக்கொண்டு மல்லு மங்கையாக இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full