எவ்ளோ டிங்கரிங் பண்ணாலும் இது பரணிக்கும் ஓவியாவுக்கு பண்ணது தான் ஞாபகம் வருது - கேலி செய்தவருக்கு ஜூலி கொடுத்த பதில்.

By Rajkumar · 18/4/2021

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.

அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த லாக் டவுன் சமயத்தில் மட்டும் அம்மணி ஏக்கச்செக்க போட்டோ ஷூட்களை நடத்திவிட்டார். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் கமன்ட் தான் வருகிறது.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், பாத்துக்கோங்கபா இதுதான் நம்மளோட முன்னாடி இருந்த வீர தமிழச்சி.என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் கொடுத்த ஜூலி, வீரம் ட்ரெஸ்ல இல்ல. உங்கள மாதிரி கமெண்ட்ஸ் போட்றவங்கள 4 வருஷமா எதிர்கொண்டு கெத்தா இருக்கறது தான் வீரம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

அதே போல வெயிட்ட கம்மி பண்ணுங்க, ரொம்ப குண்டா இருக்கீங்க என்று கமன்ட் செய்ய, அதற்கு ஜூலியோ, படத்திற்காக இப்படி உடலை ஏற்றியுள்ளேன் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர், எவ்ளோ டிங்கரிங் பெயின்டிங் பண்ணாலும் அந்த பிக் பாஸ் பாத்த ஞாபகம் தான் வருது. குறிப்பா இவர் ஓவியாவுக்கு பரணிக்கும் பண்ண விஷயம் என்று கமன்ட் செய்ய அதற்கு ஜூலி, கொஞ்சம் வளருங்க, அது வெறும் ஷோ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full