விஜய் போட்டியிடுற தொகுதியில அவருக்கு எதிரா தான் டேரா போடுறேன் - வெளுத்து வாங்கும் பிக் பாஸ் ஜூலி
சமீப காலமாகமே பிக் பாஸ் ஜூலி, தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ஜூலி dmk கட்சியில் சேர்ந்ததில் இருந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை விமர்சித்து பேசி வீடியோ வெளியிட்டு வைரலாகி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் சொன்ன ஜல்லிக்கட்டு ஸ்டோரில் இருந்து ஜூலி, விஜய்யை தாக்கி பேசி வருகிறார். இதனால் சோசியல் மீடியாவில் ஜூலியை ரசிகர்கள் ட்ரோல் செய்தும் மீடியாவில் விமர்சித்தும் வருகிறார்கள்.
இதை அடுத்து நடிகை ஜூலி, விஜய் பேசிய குட்டி கதை குறித்து கருத்து தெரிவித்ததற்காக என்னை தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள், உறுப்பினர்கள், விஜய் ரசிகர்கள் எல்லோருமே திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள். குறிப்பாக கிட்னி விற்பனை மோசடியில் தன்னை தொடர்பு படுத்தி ஆதாரம் இல்லாமல் பொய்யான வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட எட்டு பேரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்து இருந்தார்கள்.
விஜய் பற்றிய விமர்சனம்:
இதை அடுத்து மீண்டும் மீண்டும் ஜூலி விஜய்யை விமர்சித்து பல வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை மோசமாக விமர்சித்து திமுக
அரசியல் விமர்சகர் பொன்ராஜன் பேசியிருந்ததார். இதனால் விஜய் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக நடிகை ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்ன அண்ணா டி ஜி பி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தீங்க போல இருக்கிறது. நாம் அதெல்லாம் கொடுக்கலாமா அண்ணா? நாம இப்படி ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு புகார் கொடுப்பது ஒர்த்தா? யோசிக்க வேண்டாமா? அதான் உன்னோட ஆளுங்க மினி எப்ஸ்டீன் பைல்சே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=gFeABuHhwBM
ஜூலி வீடியோ:
ஒரு பெண் ஆசையாக உன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வந்தால் அந்தப் பெண்ணை தன்னுடைய இஷ்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளீர்கள். இதெல்லாம் உனக்கு தெரியும் இல்ல அண்ணா. நீதான் விரிச்சுவல் வாரியர்ஸ், நீங்க செய்றதை எல்லாம் பார்க்கிறேன். இன்னும் தொடர்ந்து செய்யுங்கள் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறாயே.
இது ஒரு ஜனநாயக நாடு.
Mini EPSTIEN files 😱#tvk #vijay #womensafety pic.twitter.com/ab9de6jYuq
— Mariajuliana_official (@iMariaJuliana) March 28, 2026
விஜய்க்கு சவால்:
புதிதாக ஒருவர் அரசியலுக்கு வந்தால் பெரும்பான்மையான மக்கள் அரசியல் வயப்படுவார்கள் என்று நல்ல எண்ணம் உன் மீது இருந்தது. உன்னுடைய கட்சியில் யாருமே வெற்றி பெற மாட்டார்கள். நீ கூட அந்த நட்சத்திரம் அந்தஸ்தை வைத்து வென்று விட வெற்றி பெற முடியாது அண்ணா. இது எந்த தொகுதியில் போட்டியிடுற மட்டும் சொல்லு. நான் அங்கு வந்து தான் டேரா போட போறேன். நான் இறங்கி நின்னு அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்வேன். பெண்களுக்கு எந்த அளவுக்கு உன்னுடைய கட்சியில் பாதுகாப்பு இருக்கிறது என்பதை நான் பிரச்சாரம் செய்வேன். சீக்கிரம் அறிவியுங்கள் அண்ணா. ஐ அம் வெயிட்டிங் நான் வரேன் அண்ணா என்று கூறி இருக்கிறார்.