குட்டை பராக்கில் மொட்டை மாடியில் போஸ் - அல்ட்ரா மாடர்னாக மாறிய ஜூலி.

By Rajkumar · 22/5/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ், ஓவியா, ரைசா என்று பல்வேறு நபர்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். அதே போல இந்த சீசன் மூலம் பலரால் வெறுக்கப்ட்டதன் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் முழு நேர நடிகையாக மாறிவிட்டார்.அதே போல பட வாய்ப்புகள் குவிந்ததால் தன்னை படு ஸ்டைலாக மாற்றிக்கொண்டார் ஜூலி.

அந்த வகையில் ஜூலி, சமீப காலமாக படு மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இதோ அதில் ஒரு சில புகைப்படங்கள். இவரது புகைப்படங்கள் எல்லாம் வந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால், இவர் நடித்த படங்கள் தான் அப்படியே கிடப்பில் இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full