நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபிசில இருப்பேன், பனையூர் வரட்டுமா? பிக் பாஸ் ஜூலி விட்ட சவால்

By subhashini · 25/2/2026

கடந்த சில தினங்களாகவே விஜய் பற்றி ஜூலி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில்
சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

அதோடு விஜய் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் தன்னுடைய கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து விஜய் அவர்கள் உரையாடி இருந்தார். அதில் விஜய் அவர்கள் ஜல்லிக்கட்டு காளை பற்றி ஒரு குட்டி கதை சொல்லியிருந்தார். இதற்கு பிக் பாஸ் ஜூலி, உங்கள் கட்சியில் பாதி பேர் மைனர்கள். ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லு கட்டு காட்ட போயிட்டு உயிரிழப்புகள் அதிகரிச்சா என்ன செய்வீங்க? என்று கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை போட்டிருந்தார்.

ஜூலி கருத்து:

இது மிகப்பெரிய அளவில் அதிர்வலை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் ஜூலியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில் அவர், விஜய் அண்ணா உங்களுடைய பேச்சை பார்த்தேன். அதில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் என்னுடைய ஆதங்கத்தில் நான் வீடியோ வெளியிட்டிருந்தேன்.

View this post on Instagram

A post shared by Filmibeat Tamil (@filmibeattamil)

ரசிகர்கள் கொந்தளிப்பு:

உங்களுடைய ரசிகர்கள் இன்னும் அவர்கள் அரசியல் வயப்படவில்லை ரசிகர்கள் தான். என்னை சமூக வலைத்தளங்களில் கடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மைனர் பசங்களிடம் இருப்பது முக்கால்வாசி போலி ஐடிகள் தான். அதை வைத்து தான் அவர்கள் என்னை மிரட்டி கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை டெலிட் செய்ய மாட்டேன். என்னுடைய கருத்துக்களில் இருந்தும் பின்வாங்க மாட்டேன். என்னை மிரட்டினால் பரவாயில்லை என்னை சேர்ந்தவர்களையும் மிரட்டுவதால் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

ஜூலி வீடியோ:

விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்றால் நான் வீட்டில் இருப்பேன். இல்லையென்றால் அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், அவர்களை விட்டு விடுங்கள். நீங்க பனையுறை விட்டு வெளியே வர மாட்டீங்கில்ல? நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன். நான் வேண்டும் ஆனால் பனையூர் வருகிறேன். என்னை திட்டினால் என்னை திட்டுவது போல தான். மக்களை திட்டுவது போல என்று யாரையும் உள்ளே இழுத்து போட மாட்டேன். ஒரு பெண்ணுக்கு சோசியல் மீடியாவில் எவ்வளவு மரியாதையும் மதிப்பும் பாதுகாப்பும் உங்கள் ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவுக்கு கீழ் உள்ள கமெண்ட்களை நேரம் இருந்தால் படியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full