ஓவியா பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி செம பல்ப் வாங்கியுள்ள ஜூலி. (இவங்களுக்கு இதே வேலையா போச்சி)

By Rajkumar · 29/4/2021

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

https://twitter.com/lianajohn28/status/1387628133755461633

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.

இதையும் பாருங்க : இன்ஸ்டாகிராமில் Transperant புடவையில் படு கிளாமர் போஸ் - நாட்டாமை பட நடிகையா இது.

இந்த லாக் டவுன் சமயத்தில் மட்டும் அம்மணி ஏக்கச்செக்க போட்டோ ஷூட்களை நடத்திவிட்டார். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் கமன்ட் தான் வருகிறது.பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை இவருக்கும் ஓவியாவிற்கும் தான் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது. மற்ற போட்டியாளர்கள் ஜூலியை வெறுத்த போது ஓவியாதான் ஆதரவாக பேசினார்.

ஆனால், அந்த நன்றியை மறந்து ஓவியா குறித்து ஜூலி தவறாக பேசினார் இதற்காக குறும்படம் எல்லாம் கூட போடப்பட்டது. அதன்பின்னர் ஜூலியை ரசிகர்கள் அதிகம் கலாய்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று ஓவியாவின் பிறந்தநாளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த ஜூலி, ஓவியாவை டேக் செய்யாமல் ஹேஷ் டேக் மட்டும் போட்டிருந்தார். இதை பார்த்த பலரும் ஹேஷ் டேக் போட்டால் உங்க வாழ்த்து எப்படி அவருக்கு தெரியும், ஒரு வேல உங்கள பிளாக் பண்ணிடாங்களா என்று கலாய்த்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full