25வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த பப்லு - பிக் பாஸ் காஜல் போட்ட நச் பதிவை பாருங்க.

By Rajkumar · 21/10/2022

25 வயது இளம் பெண்ணை நடிகர் பப்லு இரண்டாவது திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது அது குறித்து பிக் பாஸ் நடிகை காஜல் கருத்து தெரிவித்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரித்திவிராஜ். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது இவருக்கு 55 வயதாகிறது. தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ்.

மேலும், இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. அதோடு இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின் இவர் சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

பிரித்திவிராஜ் நடிக்கும் சீரியல்:

இவர் சின்னத்திரை தொடர்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் என்ன தான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைப்பில் இவர் உண்மையான ஹீரோ தான். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவருடைய மகனின் பெயர் அகத்.

பிரித்திவிராஜ் மகன்:

தன் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது எனத் தெரிய வந்தவுடன் உலகமே இடிந்து விழுந்ததாக உணர்ந்தார் பப்புலு. அன்றிலிருந்து இன்று வரை இவர் மகனுக்காவே தன்னுடைய மொத்த வாழ்க்கையும் அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், பப்லு மற்றும் அவரின் மனைவி பீனா இருவரும் மற்றொரு குழந்தையை பற்றி சிந்திக்காமல் தன்னுடைய ஒரே மகனையே குறையின்றி பார்த்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த மாதிரி குறைபாடு உள்ள குழந்தையை சரியாக வளர்ப்பது மட்டும் தான் கடமை என்றும், தன் மகனைப் போல உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்காகவும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை செய்து வருகிறார்.

நிகழ்ச்சியில் பப்புலு சொன்னது:

இந்நிலையில் நடிகர் பப்லுவிற்கு இரண்டாவது திருமணம் ஆகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பப்லு அவர்கள் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். பின் நிகழ்ச்சியில் பேசிய பப்லு தான் ஆரோக்கியமாக இருக்க காரணம் என்னுடைய மனைவி என்று ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.அந்த பெண்ணிற்கு 25 வயது தான் ஆகும். ஏற்கனவே இவருக்கு 25 வயதில் ஒரு மகன் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. பப்புலுக்கு தன் முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்திருந்தார்கள்.

காஜல் கருத்து :

இந்த சமயத்தில் தான் பப்லுக்கு மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இந்த பெண் பப்லுக்கு தொழில் ரீதியாக தான் உதவியாளராக இருந்தார். பின் சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி வெளியானதில் இருந்தே 55 வயதில் 25 வயது பொன்டாட்டிட்டியா என்று பலர் விமர்சனம் செய்ய துவங்கி இருக்கின்றனர். இதற்கு காஜல் பசுபதி 'பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான். இதுல உங்களுக்கு என்னய்யா பிரச்சனை. விசமமிக்க பொறாமை புடிச்ச உலகம்யா' என்று தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full