என்னென்ன வாங்கி கொடுத்தனு லிஸ்ட் போட்டா- ட்விட்டரில் மோதிக்கொண்ட காஜல் மற்றும் திரௌபதி இயக்குனர். இது என்ன புது பஞ்சாயத்து.

By Rajkumar · 19/6/2020

திரௌபதி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் மோகன். இவர் திரௌபதி படத்திற்கு முன்பாகவே ரிச்சர்ட்டை வைத்து பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை எடுத்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ 'திரௌபதி' திரைப்படம் தான். அதற்கு முக்கிய காரணமே இந்த படம் வெளியாவதர்க்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

https://twitter.com/mohandreamer/status/1273470165770854400

இந்த படத்தில் நாடக காதல் என்ற பெயரில் இயக்குனர் மோகன் குறிப்பிட்ட சமூகத்தினரை டார்கெட் செய்து சில காட்சிகளையும், வசனத்தையும் வைத்தார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தெளிவுபடுத்தும் வகையில் அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் மோகன் சொன்ன கருத்துக்கள் இவருக்கு சில சர்ச்சைகளையும், பெரும் பிரபலத்தையும் அளித்தது.

சமீபத்தில் இயக்குனர் மோகன், தான் ஒரு சத்ரியன் என்பதில் பெருமை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸை ராமன் அழிக்க போவது போன்ற ஒரு மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இங்கு இருக்கும் பலருக்கு இது ஒரு சவுக்கடி என்று குறிப்பிட்டிருந்தார்.

https://twitter.com/mohandreamer/status/1273552629881167872

இந்த டீவீடிக்கு கமன்ட் செய்த நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான காஜல் 'என்ன சொல்ல வரார் இந்த சூத்திரன் என்று அவாளால் அழைக்கப்படும் இவர்' என்று கிண்டலடித்தார். இதற்கு பதில் அளித்த மோகன், என்னங்க மேடம்.. வேலை வெட்டி இல்லாம போச்சா.. விளம்பரம் தேவைபடுதா.. இப்படி குறுக்கு வழியில வராம திறமைய நம்பி உழைங்க.. முன்னேறலாம்.. நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.. நல்வாழ்வு அமைய வாழ்த்துக்கள்.என்று பதில் அளித்தார்.

இதற்கு பதில் அளித்த காஜல், யாருங்க குறுக்குவழி பத்தி பேசுறது குறுக்கு வழியில் போய் இருந்தா இப்படி வெட்டியா இருக்க மாட்டேன் சார். எப்பவோ தமிழ் டிவின்னு ஒன்னு ஆரம்பிச்சு இருப்பேன். உங்க பழைய வண்ணாரப்பேட்டை படத்துக்கு ஃப்ரீயா தான் நடித்துக் கொடுத்தேன் யார் காள்லையும் நான் விழல என்று பதில் அளித்தார்.

https://twitter.com/kaajalActress/status/1273571913776852992

அதற்கு மோகன், இவவசமாகவா.. சுயநினைவு இருக்கா மேடம்.. என்ன என்ன எல்லாம் வாங்கி கொடுத்தேன், தினம் எவ்வளவு சம்பளம் கொடுத்தேன்னு லிஸ்ட் சொல்லனுமா.. அன்று காட்டிய அதே கண்ணியம் இன்றும் உண்டு என்னிடம்.. அதனால் சொல்லி காட்ட விரும்பல.. கவனமாக இருங்க உங்க ரசிகர்களிடம் என்று பதில் அளித்தார்.

அதற்கு காஜல், என்ன விளையாடுறீங்களா நீ யாருக்கு என்ன வாங்கி கொடுத்தன்னு தெரியல பாஸ். எனக்கு சாப்பாடு, கேரவன், அசிஸ்டன்ட் சம்பளம்தான். இது எல்லா படத்திலேயும் கொடுப்பாங்க பாஸ். ரெண்டு படம் எடுத்துமா இது தெரியல. சம்பளமும் னு ஒன்னு இருக்கு. நான் வேலை பாக்குறப்ப பார்ட்டி பண்ணதே இல்லைங்கோ என்று பதில் அளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full