அது எப்படிங்க முதுகுல ஆப்ரேஷன் பண்ணிட்டு இதெல்லாம் மட்டும் பண்ண முடியுது - அஜித்தை கலாய்த்த காஜல்.

By subhashini · 6/11/2022

விஜய் நடித்து இருக்கும் 'வாரிசு' படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலின் வீடியோ நேற்று வெளியான நிலையில் அதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேலி செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அதற்கு காஜல் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

https://twitter.com/VIJAYRAMASAMY20/status/1588876601596739585

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

வாரிசு படம்:

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார்.

விஜய் பாடிய பாடல் :

இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் முதல் பாடல் ப்ரோமோ ஒன்று நெற்றி வெளியானது.

கேலி செய்யும் அஜித் ரசிகர்கள் :

ரஞ்சிதமே என்று துவங்கும் இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். பொதுவாகவே, விஜயின் படம் என்றாலே அவருடைய நடனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், இந்த படத்தின் பாடல் ஒரு தரப்பு ரசிகர்களால் விரும்பப்பட்டாலும் ஒரு தரப்பு ரசிகர்களால் Troll செயயப்பட்டு வருகிறது. மேலும், இந்த பாடலில் விஜய்யின் நடனத்தை அஜித் ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

காஜல் பதிலடி :

அஜித் ரசிகர்களின் கேலிக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான காஜல் அஜித் மற்றும் அவரது ரசிகர்களை கேலி செய்யும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவுகளை போட்டுள்ளார். அதில் ஒரு பதிவில் 'அது எப்படிங்க முதுல பிரச்சனை வச்சிட்டு சண்டைலாம் மட்டும் நல்லா பண்ண முடியுது என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் ஆமை புகைப்படத்தை பதிவிட்டு சத்தமா, கேப் எடுத்துக்கோ ப்ரோ வாய் வலிக்க போது என்று மோசமான புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். மேலும், ரஞ்சிதமே பாடலுக்கு பதில் அஜித்தின் தீபாவளி பாடலை போட்டு 'எந்த பாட்டுக்கு நடக்காம டான்ஸ் ஆடுனா எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை என்று பதிவிட்டுள்ளார்.' என்றும் பதிவிட்டுள்ளார் காஜல்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full