தாமதமாக வெளியான இன்றைய முதல் ப்ரோமோ.! கமல் என்ன சொல்கிறார்.!

By Rajkumar · 31/8/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி 66 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய பொம்மலாட்ட மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், இந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது.

https://twitter.com/vijaytelevision/status/1167734063077179392

இந்த டாஸ்க்கில் சிறந்த போட்டியாளர்களாக ஏற்கனவே வனிதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் முகென் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் இன்று நடைபெற உள்ள அடுத்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்கில்முகென், வனிதா, சேரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த டாஸ்கில் வெற்றி பெறுவார்கள் அடுத்த வார தலைவராக பொறுப்பு ஏற்பார்கள்.

அதேபோல அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று பிக்பாஸ் அறிவித்து இருந்தார். ஆனால், அது எந்த பவர் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று வனிதா அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிராமிய கலைஞகளுடன் கமலும் ஒன்றாக இணைந்து அவர்களின் பெருமை குறித்து பேசியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full