சென்னையில் சில தினங்களுக்கு முன்னால் திருமண விழாவிற்காக சாலையோரங்களில் வைக்கப்பட்ட பேனர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் மீது சரிந்து பெண் விழுந்தது. பின்னர் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ உடைய வண்டியின் மேல் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவரான கமல்ஹாசன் அவர்கள் சுபஸ்ரீ இன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களிடம் இரங்களையும் ,ஆறுதலையும் தெரிவித்தார்.

இதையும் பாருங்க : துவங்கியது இந்த வார நாமினேஷன்.! நாமினேட் செய்த நபரிடமே கூறிய சேரன்.!

Advertisement

சென்னையில் பள்ளிக்கரணை வழியாக பல்லாவரம் சாலையில் உள்ள மீடியன் முழுக்க திருமண விழாவிற்கான பேனர்களும்,அரசியல்வாதிகளின் கட்சிக் கொடிகளும் சாலைகளை மறைக்கும் அளவில் வைக்கப்பட்டிருந்தன.சுபஸ்ரீ பொறியியல் துறையில் பிடெக் முடித்து ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். தினமும் தான் வேலை செய்யும் கம்பெனிக்கு ஸ்கூட்டியில் தான் செல்லுவார் மற்றும் வேலை முடித்துவிட்டு ஸ்கூட்டியில் தான் வீட்டுக்கு வருவார். அப்படி வரும் வழியில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது.


சுபஸ்ரீ தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு பள்ளிக்கரணை சாலை வழியாக தன்னுடைய ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் இந்த பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்தது. சுபஸ்ரீ நிலைதடுமாறி ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். ஆனால் அந்த சாலையின் வழியே வந்த தண்ணீர் லாரி அவர் கீழே விழுந்ததைக் கவனிக்காமல் அவர் மீது மேலே ஏறிச் சென்றது.மேலும் லாரியின் அடியில் டயர்களுக்கிடையே சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

Advertisement

இந்த நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம் தமிழக மக்களிடையே ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு உடனடியாக காவல்துறையினர் வந்தனர். மேலும் அவர்கள் மரணத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் மனோஜை கைது செய்தார்கள். சுபஸ்ரீ அவருடைய பெற்றோருக்கு ஒரே மகள் அவர். சுபஸ்ரீ மரணம் குறித்து அவர்களுடைய பெற்றோர்கள் கதறி கதறி கண்ணீர் மல்க அழுது போராடினார்கள்

Advertisement

சென்னையில் உள்ள உயர் நீதிமன்றம் பொது மக்களை பாதிக்கும் வகையில் பேனர்களை வைத்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று விதிகளை விதித்துள்ளது.ஆனால் அத்துமீறி அனுமதி இன்றி பேனர்கள் வைத்தால் 5,000 ரூபாய் அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனையும் கொடுக்கப்படும் என்று ஏற்கனவே உத்தரவிட்டார்கள். இந்த சம்பவத்தின் மூலம் உயர்நீதிமன்றம் முறையான அனுமதி இல்லாமல் பேனர்களை வைப்பவர்கள் அதுவும் சாலைகளில் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களை வைத்தால் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது அரசாங்கம்.

இந்த நிகழ்வின் மூலம் சுபஸ்ரீ குடும்பத்தினரை சந்தித்து அரசியல்வாதிகள்,பிரபலமானவர்கள் தங்களின் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் அவர்களும் சுபஸ்ரீ இன் குடும்பத்தினரை அவரது வீட்டுக்கு நேரில் சென்று தன்னுடைய இரங்கலையும் ,ஆறுதலையும் தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, நாடு முழுவதும் உள்ள இந்த பேனர் கலாச்சாரங்களை ஒழித்தல் அவசியம், அப்படி அரசாங்கம் ஒழிக்கவில்லை என்றால் மக்களே பேனர்களை ஒழிப்பார்கள் என்று ஆவேசத்துடன் கமலஹாசன் பேட்டி அளித்தார். மேலும் இந்த பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க மக்கள் நீதி மையம் மக்களுக்கு துணையாக இருக்கும் என்றும் அவர் கூறிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement