இது போட்டித்தளம் இத சுற்றுல்லா தளமா மாத்திடாதீங்க.! நோஸ் கட் கொடுக்கும் கமல்.!

By Rajkumar · 25/8/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 61 நாளை நிறைவு செய்துவிட்டது. இத்தனை நாள் கடந்த நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

https://twitter.com/vijaytelevision/status/1165467388281647104

மேலும் இன்னும் இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவுள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டாக்கில் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட சேரன், சாண்டி, லாஸ்லியா மூவரில் நேற்று சீட்டுக் குலுக்கிப் போட்டு சேரன் அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் பாருங்க : பிரியா ஆனந்த் பதிவிட்ட புகைப்படம்.! கமன்ட் செய்த பாண்டா.! ஆபாச பதிலளித்த பிரியா ஆனந்த் ? 

எனவே, அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷினில் சேரனை யாரும் நாமினேட் செய்ய முடியாது. இது ஒருபுறமிருக்க கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் சாண்டி, தர்ஷன்,சேரன், கஸ்தூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் நேற்றுடன் ஓட்டிங் முடிந்த நிலையில் கஸ்தூரி தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full