ரெட் கார்டு வாங்கியதற்கு பின் பிக் பாஸ் கம்ருதீன் செய்த தரமான சம்பவம் - வைரலாகும் வீடியோ

By subhashini · 12/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 98 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன்,ரம்யா, வியானா, எப் ஜே மற்றும் ஆதிரை, அமித், கனி, சுபிக்ஷா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 9:

கடந்த வாரம் டிக்கட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்றிருந்தார். மேலும், கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கடைசி எவிக்ஷனில் சாண்ட்ரா வெளியேறி இருந்தார். தற்போது பினாலேவுக்கு சபரி, விக்ரம், திவ்யா, அரோரா ஆகியோர் தேர்வு ஆகி இருக்கிறார்கள். இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியில் நடந்த கார் டாஸ்க்கில் சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருந்தார்கள்.

கம்ருதீன் விவகாரம்:

இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருந்தது. பின் விஜய் சேதுபதி, பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார். இதை அடுத்து மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. நிகழ்ச்சியை விட்டு வெளிவந்தும் கம்ருதீன் குறித்து எந்த ஒரு செய்தியும் வெளியாகாமல் இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் ரசிகர்கள் கம்ருதீனை கொண்டாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Pradeep Kumar (@mr_pradeep_offical_21)

கம்ருதீன் வீடியோ:

அதாவது, கம்ருதீன் ஆவடி பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மேளத் தாளத்துடன், பட்டாசு வெடித்து கம்ருதீனுக்கு மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்றிருந்தார்கள். ஒரு வெற்றியாளரை கொண்டாடுவது போல கம்ருதீனுக்கு வரவேற்பு கொடுத்திருந்தார்கள். அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து கம்ருதீன் செம குத்தாட்டமும் போட்டு இருந்தார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெட் கார்டு கொடுத்து கம்ருதீன் வெளியே வந்தாலும் தற்போது சோசியல் மீடியாவில் ஹீரோ போல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full