பிக் பாஸ்ல இப்படி பண்ணா கமல் ஐயாவுக்கு அது பிடிக்காது - கஞ்சா கருப்பு சொன்ன விஷயம்.

By Rajkumar · 11/11/2022

பிக் பாஸ் குறித்து கஞ்சா கருப்பு அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் கஞ்சா கறுப்பு. இவருடைய உண்மையான பெயர் கறுப்பு ராஜா. இவர் மதுரையை சேர்ந்தவர். இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த பிதாமகன் என்ற படத்தில் கஞ்சா விற்பவராக கறுப்பு நடித்திருந்தார்.

இதனால் அவரை அனைவரும் கஞ்சா கருப்பு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ்மகன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதன் பின் இவர் தான் சம்பாதித்த மொத்த பணத்தை வைத்து படம் ஒன்றை தயாரித்து இருந்தார். இவர் சினிமா துறையில் பல படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் இறக்கி இருந்தார்.

கஞ்சா கருப்பு திரைப்பயணம்:

ஆனால், மொத்த பணத்தையும் இழந்த நடிகர்கள் வரிசையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்புவும் ஒன்று. இவர் ‘வேல்முருகன் போர்வெல்’ என்று படத்தை தயாரித்து இருந்தார். இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது கூட பலருக்கும் தெரியாது. இதனால் மனம் உடைந்த கஞ்சா கறுப்பு கொஞ்ச காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார்.

கஞ்சா கருப்பு நடிக்கும் படங்கள்:

இதனைத் தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஓங்காரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கஞ்சா கருப்பு கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் ஓங்காரம் பட நடிகையை தகாத வார்த்தைகளால் திட்டி இருந்தார். இது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கஞ்சா கருப்பு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் பிக் பாஸ் குறித்து கூறியிருந்தது, பிக் பாஸ் என்பது பாடம் கற்றுக் கொடுக்கிற இடம்.

பிக் பாஸ் குறித்து சொன்னது:

அதுக்கு தலைமை ஆசிரியராகத்தான் உலகநாயகன் இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் நடிப்பதை விட இயல்பாக இருந்தாலே கமல் ஐயா நல்ல உயரத்துக்கு கொண்டு போவார். கமல் ஐயா, பிக் பாஸ் அய்யாவும் அதை கவனித்து மார்க் போடுவார்கள். இங்கிருந்து அங்க போனதில் சிலபேர் அங்கே ஓவரா நடித்திருக்கிறார்கள். கமல் ஐயாவுக்கு அது பிடிக்காது. நேர்மையாக இருந்தால் எதிர்காலம் உண்டு. கமல் சார் நினைத்தால் அது நடக்கும். நான் முதன் முதலாக அங்கே போனதும் அவ்ளோ கேமராக்கள் இருந்ததை பார்த்து ஆச்சரியமானேன். ஆனால், அந்த வீட்டில் இருந்து விட்டால் வேறு எந்த சூழலையும் சமாளித்து வந்துடலாம்.

மீண்டும் பிக் பாஸ் வாய்ப்பு குறித்து சொன்னது:

நான் இருந்த சீசனில் என் கூட இருந்த அத்தனை பேருடனும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து பேசிக் கொள்கிறோம். அந்த சீசனில் சிநேகனுக்கு அவார்டு கிடைத்து இருக்கணும். ஆனால், ஆரவிற்கு கிடைத்திருக்கு. கமல் சார் நடத்தினால் தான் பிக் பாஸ் நல்லா இருக்கும். மறுபடியும் கூப்பிட்டால் கூட போகமாட்டேன். ஏன்னா, என்னுடைய தொழில் நடிப்பு. அதில் கவனம் செலுத்தணும் என்று விரும்புகிறேன். சினிமாவில் நடிக்கணும் என்று தான் சென்னை வந்தேன். பிக்பாஸில் போகணும் என்று வரவில்லை. நான் ஓடுற குதிரையாய் இருக்க விரும்புகிறேன். ஓடும் போது திரும்பி பார்த்தால் பின்னாடி வருபவர்கள் நம்மை தள்ளிவிட்டு போய்விடுவார்கள் என்று வேடிக்கையாக பேசி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full