லியோ ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசி இருப்பது குறித்து நடிகை கஸ்தூரி கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது.

Advertisement

லியோ படம்:

இதற்கான பாஸ்கள், விழா நடைபெறுவதற்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. ஆனால், மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக `ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் ட்ரெய்லரில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கெட்ட வார்த்தை விஜய் பேசி நடித்திருக்கிறார்.

லியோ ட்ரைலர்:

இதனால் பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதனால் லியோ ட்ரைலர் குறித்து சிலர் நெகட்டிவான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். இதனை அடுத்து இந்த சர்ச்சைகளுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் கஸ்தூரி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் தொகுப்பாளர், விஜியை மட்டும் ஏன் எல்லோரும் டார்கெட் செய்கிறீர்கள்.

Advertisement

ரஜினி- கமல் குறித்து சொன்னது:

இதற்கு முன்பு பிரபலமான நடிகர்களான ரஜினி, கமல் படத்தில் கூட தான் இந்த மாதிரி கெட்ட வார்த்தை பேசி இருக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே கஸ்தூரி, அப்படியா! எனக்கு எதுவும் தெரியவில்லையே. ரஜினி படத்தில் அந்த மாதிரி எதுவும் தெரியவில்லை. கமல் எந்த படத்தில் அந்த மாதிரி பேசி இருக்கிறார் என்று கேட்கிறார். உடனே தொகுப்பாளர், மகாநதி படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் கமல் கெட்ட வார்த்தை பேசி இருப்பார் என்று சொல்கிறார்.

Advertisement

கஸ்தூரி கொடுத்த பதில்:

அதற்கு கஸ்தூரி, லியோ படமும் மகாநதி படமும் ஒன்றா? மகாநதி படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தார்கள். அந்த படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால், விஜய் படத்திற்கு அப்படி எந்த சர்டிபிகேட் கொடுக்கவில்லை. சாதாரண மொபைலில் ஒரு விளம்பரம் வந்தால் கூட விஜய் என்று அவருடைய படத்தை தான் குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள். அப்படி இருக்கும் போது அவர் கெட்ட வார்த்தை பேசி இருப்பது தவறு தான் என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement