தேவதாசி முறையை ஒழித்ததே முத்துலட்சுமி ரெட்டி என்ற பிராமினர் தான் - உதயநிதி, ஆ.ராசாவை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி

By Rajkumar · 10/9/2023

சனாதனம் கருத்து தொடர்பாக உதயநிதி, ஆ ராசாவே விமர்சித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் உதயநிதியின் சனாதன கருத்து தான் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும். சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும்.

அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும்.

சனாதனம்:

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் அதற்க்கு எதிர்ப்பாக பதிவு செய்து இருந்தார். தமிழகத்தில் மற்றகூடதாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் என்ற கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது. திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது. ஆனால், ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது.

https://www.youtube.com/watch?v=QmaYIFt-mRM

உதயநிதி கருத்து சர்ச்சை:

இந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். இங்கு பேசிவிட்டு அனைவரும் கலைந்து விடக் கூடாது. இங்கு பேசிய கருத்துகளை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த சனாதன பேச்சுக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு பத்து கோடி ரூபாய் விலை என்று அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா அறிவித்திருந்தார். பின் சமீபத்தில் திமுக எம்பி ஆ ராசா அவர்கள் சனாதனம் தர்மம் என்பது எய்ட்ஸ் மற்றும் தொழு நோயை போன்றது என்று பேசி இருந்தார்.

கஸ்தூரி பதில் டீவ்ட்:

இந்த நிலையில் உதயநிதி மற்றும் ஆர் ராசாவின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இளவரசருக்கு டெங்கு, கொரோனா. ராஜாவுக்கு எய்ட்ஸ் தொழுநோய். பொருத்தம் தான். அட, மாநாடு வேணாம்யா திராவிடிய விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதாரமணம் எதிர்ப்பு , லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா? ஹூம் . பிடிக்காத விஷயத்தை தானே எதிர்க்க முடியும் என்று கிண்டலாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=QJUK1lmYC9s

உதயநிதி குறித்து சொன்னது:

அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே இது தொடர்பாக நடிகை கஸ்தூரி டீவ்ட் ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், டெங்கு, மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே. அவங்களை என்ன பண்ணுறது? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி. அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க என்று கடுமையாக விமர்சித்து கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full