சித்தார்த்த கூத்தாடினா, அப்போ ரஜினி, குஷ்பூலாம் யாரு - மாரிதாஸை வெளுத்த பிக் பாஸ் நடிகை.

By Rajkumar · 15/5/2021

சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கிங் நபராக இருந்து வருகிறார் நடிகர் சித்தார்த். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த்.சமூக வலைதளத்தில் கடந்த சில காலமாகவே மத்திய அரசை கடுமையாக சாடி வருகிறார். அதிலும் சமீபத்தில் உத்தரப்பிரதேசச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அரை விழும் என்று சித்தார்த் செய்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.சித்தார்த்தின் இந்த பதிவால் பா ஜ கவினர் சித்தார்த்தை திட்டி தீர்த்து வந்தனர்.

https://twitter.com/Actor_Siddharth/status/1388360271467405319

இந்த நிலையில், தனது தொலைபேசி எண்ணை தமிழக பாஜகவினர் பரப்பி வருகின்றனர் என்றும் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டி போலீசிலும் புகார் அளித்தார், பின்னர் இவருக்கு போலீசார் பாதகாப்பு தர முன்வந்த போது அதனை மறுத்துவிட்டார் சித்தார்த். இருப்பினும் பா ஜ க அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சித்தார்த்தை கூத்தாடி என்று மாரிதாஸ் கூறியுள்ளதை பிரபல பிக் பாஸ் நடிகை கண்டித்துள்ளார்.

யூடுயூ ப் சேனலை நடத்தி வரும் மாரிதாஸ், திராவிட, தமிழ் தேசியவாத அமைப்பினரின் உணர்வுகளை சீண்டுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக, "சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பான திமுகவின் நிலைப்பாடு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருக்கிறது. அதனால் திமுகவிற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம்" என்ற உச்சக்கட்ட அபாய கருத்தை அசால்ட்டாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

https://twitter.com/MaridhasAnswers/status/1393095405936660480

இப்படி ஒரு நிலையில் நடிகர் சித்தார்த் குறித்து ட்வீட் செய்துள்ள மாரிதாஸ், டேய் விடியல் எங்கடா? டேய் பெட் எங்கடா? டேய் பிணம் எரிக்க இடம் எங்கடா? டேய் கூத்தாடி சித்தார்த். உன்ன தாண்டா டேய். மக்கள் வருமானம் இல்லாமல் இருக்கும் போது மின்கட்டணம் கட்ட சொல்கிறது திமுக விடியல் அரசு. இப்போ வாயை திறடா சித்தார்த். வாய்க் கொழுப்பு பேசி திரிந்த! இப்போ பேசு டேய். என்று கமன்ட் செய்துள்ளார்.

https://twitter.com/KasthuriShankar/status/1393202786708254724

இதனை பார்த்து கடுப்பான நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி, எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். சித்தார்த்தின் தொழிலை ஏன் இங்கே இழிவுபடுத்துகிறீர்கள் ? நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா ? பாஜகவின் நடிகர்களின் ஆர்மி இதனை ஒப்புக்கொள்ளுமா ? என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/KasthuriShankar/status/1393208804066529283

மேலும், சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. சித்தார்த்தின் நடிகர்கள் அனைவரின் பிரதிநிதியும் இல்லை. ரஜினி கங்கனா,குஷ்பு, காயத்ரி ரகுராம், மிதுன் சக்ரவர்த்தி அக்ஷய் குமார் இவங்களுக்கு பிஜேபி ல என்ன பேரு?என்று பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full