கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் - என்னாத்த, அவரும் சொல்லி சொல்லி பார்க்கிறாரு. அஜித் ரசிகர்களை கேலி செய்த பிக் பாஸ் 3 நடிகை.

By Rajkumar · 16/2/2021

வலிமை படத்தின் அப்டேட்டை சம்மந்தமே இல்லாமல் இடங்களில் கேட்ட தனது ரசிகர்களின் செயல்பாடுகள் தனக்கு வருத்தமளிக்கிறது என்று அஜித் அறிக்கை வெளியிட்டதை அஜித் ரசிகர்களை கேலி செய்யும் வகையில் ட்வீட் செய்துள்ளார் பிக் பாஸ் 3 சர்ச்சை நடிகை. வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர்.நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர்.

https://twitter.com/premadeepa06/status/1361385650935664645

அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.அவ்வளவு ஏன்பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக நேற்று (பிப்ரவரி 14) தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : 25 ஆண்டுகளுக்கு பின் சமந்தா படத்தில் நடித்த அம்மன் பட குழந்தை - எப்படி இருக்கார் பாருங்க.

இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல் விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது.உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்என்று குறிப்பிட்டு இருந்தார்.

https://twitter.com/its_karthi_s/status/1361360268148711427

இப்படி ஒரு நிலையில் அஜித் வெளியிட்ட இந்த அறிக்கையை வைத்து அஜித் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ரசிகர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் - நடிகர் அஜித் அறிக்கை .என்னாத்த! அவரும் சொல்லி சொல்லி பார்க்கிறாரு என்று பதிவிட்டு Ajith vs #ajithfans #sevidan_kaadhula_sangu #ValimaiUpdate போன்ற ஹேஷ் டேக்குகளையெல்லாம் போட்டு தலையில் அடித்துக்கொள்ளும் எமோஜிக்களையும் போட்டு அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.

https://twitter.com/KasthuriShankar/status/1218798438357204994

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்த இவர் தமிழ் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடிமீண்டும் ரீ -என்ட்ரி கொடுத்தார். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே இவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சமூக வலைதளத்தில் பணிப்போர் சென்று கொண்டு தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full