விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பிரச்சனை இல்லாமல் இருந்தது இல்லை. அதிலும் காண்ட்ராக்ட், சம்பள விவகாரம் என்று பல்வேறு பிரச்சனைகள் கடந்த ஆண்டு நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை கஸ்தூரி, தனக்கு இன்னமும் சம்பள பாக்கி இருக்கிறது என்று ட்வீட் போட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான கஸ்தூரி தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு சர்ச்சையான பதிவுகள் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் கடந்த ஆண்டு ஒளிபரண பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், ட்விட்டரில் இவர் ஏற்படுத்திய பாரபரப்பை பிக் பாஸில் ஏற்படுத்த முடியவில்லை.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர் தொடர்ந்து ட்வீட் செய்துவந்தார். அதிலும் சமீபத்தில் வனிதாவின் திருமண விஷயத்தில் தலையிட்டு கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி ஒரு நிலையில் தனக்கு பிக் பாஸில் தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் வரவில்லை என்று ட்வீட் போட்டுள்ளார். அதில் ‘என்னுடைய சம்பளத்தை தராமல் இருக்கும் விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே manumission குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். உங்களின் பொய்யான வாக்குறுதிகளை நான் நம்பவில்லை. ஆனால், இதை நான் எதிர்பார்க்கவும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவிற்கு விளக்கமளித்துள்ள விஜய் டிவி ‘எங்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் கலந்து கொள்பவர்களுக்கு குறித்த நேரத்தில் அதற்கான சம்பளத்தை கொடுத்து விடுவது வழக்கம். அதைப்போல நடிகை கஸ்தூரி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டுவிட்டது.

Advertisement

அவருடைய GST பதிவு முறை பொருந்திப்போகாத காரணத்தால் அதை மட்டும் நிறுத்தி வைத்திருக்கிறோம். கஸ்தூரி அதற்கான ஆவணங்களை கொடுப்பதற்காக காத்திருக்கிறோம். அவை ஒப்படைத்த பின்னர் அதற்கான தொகையையும் அவரிடம் கொடுத்துவிடுவோம்.பிக்பாஸ் தவிர அவர் விஜய் டிவியில் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்ச்சிக்கும் அவர் விலைவிவர பட்டியல் (invoice) சமர்ப்பிக்கவில்லை. அதனால் அந்தத் தொகையை தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளது.

Advertisement
Advertisement